

மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள் நீங்கள். உங்களுக்கு பாக்யாதிபதி குருபகவான் சாதகமாக 2-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். 2-ல் அமர்ந்திருக்கும் உங்களின் தனாதிபதி சுக்கிரன், 29-ஆம் தேதி முதல் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன்- மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வங்கிக் கடன் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
அரசியல்வாதிகள், கட்சி ரகசியங் களை வெளியிட வேண்டாம். கன்னிப் பெண்கள், தவறான எண்ணங் களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
சாதிக்கும் நேரம் இது!
