Published:Updated:

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

Published:Updated:
ரிஷபம்
ரிஷபம்

தையும் திட்டமிட்டு செய்பவர்கள் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி பல காரியங்களில் வெற்றி காண்பீர்கள். 29-ஆம் தேதி முதல், உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான புதனுடன் ராசிநாதன் சுக்கிரனும் சேர்வதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட குழப்பங் கள், பிரச்னைகள் நீங்கும். சூரியன் 3-ஆம் வீட்டில் இருப்பதால் அவ்வப்போது சின்னச்சின்ன தடுமாற்றம், வேலைச்சுமை இருக்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். என்றாலும், துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். செவ்வாயும், சனியும் 5-ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அடுத்தடுத்து பிரச்னைகள் இருக்கும். 30, 31 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் அநாவசியமான பேச்சை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவார்கள். கன்னிப் பெண்களின் உணர்வுகளைப் பெற்றோர் புரிந்துகொண்டு பாச மழை பொழிவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தி யோகத்தில் திருப்தி உண்டாகும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றியடைவீர்கள்.

ராஜதந்திரம் பலன் தரும்! 

ரிஷபம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism