

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதித்துக் காட்டுபவர்கள் நீங்கள். உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டிருப்பதால் நல்லது நடக்கும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். யோகாதிபதி சுக்கிரன் 29-ஆம் தேதி முதல் 10-ஆம் வீட்டில் நுழைவதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்ததில் நல்ல பதில் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராசிநாதன் புதன் 10-ஆம் வீட்டிலேயே ஆட்சி பெற்று நிற்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக் கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். கால் மற்றும் கழுத்து வலி குணமாகும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும்.
##~## |
அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களுக்கு காதல் கைகூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சிக்கல் களும் குழப்பங்களும் நீங்கும். கலைத் துறையினர் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலம் ஆவார்கள்.
தொட்டதெல்லாம் துலங்கும்!
