

ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்கள் நீங்கள். 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 8-ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். 29-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டில் நுழைவதால் வீண் அலைச்சல், செலவுகள், குழப்பங்கள், தடுமாற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் விலகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது- விற்பது லாபகரமாக முடியும். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான புதன் 9-ஆம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால், தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சூரியன் வலுவாக இருப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக் கும். 6-ஆம் வீட்டில் குருபகவான் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.
##~## |
உத்தியோகத்தில், உயரதிகாரி சில நேரங்களில் உங்களை கடிந்து பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத் துறையினருக்கு வெகுநாட்களாக தடைப்பட்ட வாய்ப்பு கள் கூடிவரும்.
ரகசியம் காப்பது அவசியம்!
