Published:Updated:

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

Published:Updated:
விருச்சிகம்
விருச்சிகம்

காலச் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் நீங்கள். ராசிக்கு யோகாதிபதியான குருபகவான் வலுவாக இருப்பதால் உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நாடாளுபவர்களின் தொடர்பு கிட்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
29-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ல் மறைவதால் மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. ஷேர் வகைகளால் பணம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 9-ஆம் வீட்டில் சூரியன் நிற்பதால் திடீர் செலவுகளை தவிர்ப்பது நல்லது. செவ்வாயும் சனியும் லாப வீட்டில் நிற்பதால் வேற்றுமொழி பேசுபவர்கள், அயல் நாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ராசிக்குள் ராகு நிற்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  

அரசியல்வாதிகள் தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் கட்சி மேலிடத்துக்கு கொண்டு செல்வது அவசியம். கன்னிப் பெண்கள், பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்களை தீட்டுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். கலைத் துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் பெறுவார்கள்.

அதிகாரம் பெருகும்!

விருச்சிகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism