Published:Updated:

கும்பம்

கும்பம்

கும்பம்

கும்பம்

Published:Updated:
கும்பம்
கும்பம்

ட்சியக் கனவுடன் வாழ்பவர் கள் நீங்கள். புதன் 5-ஆம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை தீர்க்க நல்ல வழி கிடைக்கும். 28-ஆம் தேதி வரை சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
29-ஆம் தேதி முதல் சுக்கிரன், புதனுடன் சேர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். ஏமாற்றம் அளித்து வந்த பிள்ளைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு வாங்குவார்கள். சூரியன் 6-ஆம் வீட்டில் நிற்பதால் பழைய கடனைத் தீர்க்க சில வழி கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களின் மனம் மாறும். வீண் பழியில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை வளரும். 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமை காப்பது நல்லது.

அரசியல்வாதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். கன்னிப் பெண்களுக்கு சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரம் செய்வோருக்கு தொழிலில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிரபலமாகும் தருணம் இது!

கும்பம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism