Published:Updated:

ராசி பலன்கள் !

பிப்ரவரி 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

ராசி பலன்கள் !

பிப்ரவரி 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

Published:Updated:

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்: எல்லோருக்கும் நல்லது செய்யும் நீங்கள், வெள்ளை உள்ளம் கொண்டவர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குரு 12-ல் மறைந்திருப்பதால்... திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் பதவி உயரும். சம்பளம் கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய திட்டங்கள் நிறைவேறும் வேளையிது.

ரிஷபம்: சேமிக்கும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதை செய்வீர்கள்.

யோகாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் மேம்படும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். வீட்டை புதுப்பிப்பீர்கள்.  ராசிநாதன் சுக்கிரன், ராகுவுடன் நிற்பதால்... கொஞ்சம் அலைச்சல் ஏற்படலாம். 13-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளை யும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

மதிப்பு, மரியாதை கூடும் நேரமிது.

மிதுனம்: சகிப்புத்தன்மை உடைய நீங்கள், சண்டைக்காரர்களிடமும் சகஜமாகப் பேசுவீர்கள்.

யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால்... சோர்வு, களைப்பு நீங்கும். ஓரளவு பணவரவு உண்டு. சூரியனும், செவ்வாயும், புதனும் 8-ல் தொடர்வதால், செலவுகள் துரத்தும். 12-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் 9-ம் வீட்டுக்குச் செல்வதால்... மன நிம்மதி ஏற்படும். 13-ம் தேதி முதல் சூரியன், செவ்வாய் 9-ல் அமர்வதால் டென்ஷன் குறையும். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.

நிதானம் தேவைப்படும் தருணமிது.  

கடகம்: சீர்திருத்தவாதிகளான நீங்கள், பிறரின் சுதந்திரத்தில் தலையிட மாட்டீர்கள்.

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். 4-ம் தேதி முதல் 6-ம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கை தேவை. 6-ல் சுக்கிரன் தொடர்வதால், வீண் செலவு ஏற்படலாம். 13-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையாது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் தேவை.  

சாதனை புரியும் காலமிது.

சிம்மம்: தீர்க்கமாக முடிவெடுக்கும் நீங்கள், நீதி, நெறிமுறைகளை மீற மாட்டீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். 13-ம் தேதி முதல் சூரியனும், செவ்வாயும் 7-ல் அமர்வதால்... கணவருக்கு மருத்துவச் செலவு வரக்கூடும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் அலைச்சல், தோழிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 6-ம் தேதி மாலை 3 மணி முதல் 8-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் நிதானித்து செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள்.  

எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் வேளையிது.  

கன்னி: துயரங்களைக் கண்டு துவளாத நீங்கள், 'நாளை நமதே’ என்ற நம்பிக்கையுடன் வாழ்பவர்கள்.

குரு பகவான் வலுவாக இருப்பதால், வீடு, மனை அமையும்.  கணவர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சுற்றத்தார் வலிய வந்து உறவாடுவார்கள். 5-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால்... டென்ஷன், வாகனப் பழுது வந்து நீங்கும். 13-ம் தேதி முதல் சூரியனும், செவ்வாயும் 6-ல் நுழைவதால், தொட்டது துலங்கும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரமிது.  

துலாம்: நீதியை விரும்பும் நீங்கள், அநியாயத்துக்கு துணை போக மாட்டீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஓரளவு பண வரவு உண்டு. ராசிநாதன் சுக்கிரன், ராகுவுடன் நின்றாலும்... சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தைரியம் பிறக்கும். சூரியனும், செவ்வாயும் சரியில்லாததால்... உடல் உபாதை வந்து விலகும். 11-ம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் 13-ம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ் டமம் இருப்பதால், வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளையிது.

தனுசு: மென்மையான சிந்தனை உடைய நீங்கள், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டீர்கள்.

செவ்வாயும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தாமதமாகிக் கொண்டிருந்த காரியங்கள் உடனே முடியும். கணவர் பாசமாகப் பேசுவார். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு.  குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். 13-ம் தேதி முதல் சூரியன் 3-ல் செல்வதால், அரசால் அனுகூலம் உண்டு. உடல் உபாதை நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

வேலைச்சுமை அதிகரிக்கும் தருணமிது.

விருச்சிகம்: சுயநல சிந்தனையற்ற  நீங்கள், தராதரம் அறிந்து பழகுபவர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வசதி பெருகும். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு கட்டும் பணி விரைந்து முடியும். அரசு காரியங்கள் சாதகமாக அமையும். 13-ம் தேதி இரவு 8 மணி முதல் 15-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். கமிஷன், புரோக்ரேஜ் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.

நினைத்ததை முடித்துக் காட்டும் நேரமிது.  

மகரம்: 'விழுவதெல்லாம் எழுவதற்கே’ என்பதை அறிந்த நீங்கள், இலக்கை எட்டும் வரை ஓயமாட்டீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும்.  பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். ராசிக்குள் சூரியனும், செவ்வாயும் நிற்பதால் வீண் டென்ஷன் வந்து நீங்கும். 13-ம் தேதி முதல் உடல் நலம் சீராகும். ஆனால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஷேர் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

வளைந்து கொடுக்க வேண்டிய வேளையிது.

கும்பம்: சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களைக் காயப்படுத்தாத நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள்.

குரு ஆதரவாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொந்தக்காரர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துவீர்கள். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால் உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் வளைந்து கொடுங்கள். உத்யோகத்தில் சில சூட்சமங்களைத் தெரிந்துகொள்வீர்கள்.

சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் தருணமிது.

 மீனம்: எங்கும், எப்போதும் கலாசாரத்தை மறக்காதவர்கள் நீங்கள்!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்கி, வீட்டை அழகுபடுத்துவீர்கள். 13-ம் தேதி வரை சூரியனும், செவ்வாயும் 11-ம் வீட்டில் நிற்பதால், அரசு காரியங்கள் சுலபமாக முடியும். 7-ல் சனியும், ராசிக்குள் குருவும் தொடர்வதால் கவலைகள், வீண் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களை யாராவது தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.