Published:Updated:

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

ராசிபலன்!

Published:Updated:
ராசிபலன்!
ராசிபலன்!
ராசிபலன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக்கு தவறாதவர் நீங்கள். புதன் வலுவாக இருப்பதால் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவர். சுக்கிரன் 9-ஆம் வீட்டில் சாதகமாக நிற்பதால் மனைவி வழி உறவினர் மதிப்பர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் ராகுவுடன் நிற்பதால் மனைவிக்கு இடுப்பு வலி, கழுத்து வலி வந்து நீங்கும். யோகாதிபதிகளான சூரியனும் செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும்.

##~##
மகனுக்கு வெளிநாட்டு தொடர்பு உடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். சகோதரி உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார். குரு பகவான் 12-ல் மறைந்திருப்பதால் வேலைப் பளு இருக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். கன்னிப் பெண்களின் முயற்சிக்கு பெற்றோர் ஆதரிப்பர். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பர். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்கள் ஆதரிப்பர். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். அதிகாரிகள் பாராட்டுவார். கலைத்துறையினருக்கு, வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும்.

நினைத்ததை முடிக்கும் தருணம் இது.

ராசிபலன்!

விட்டுக் கொடுப்பவர் நீங்கள். சூரியன் வலுவாக இருப்பதால் இழுபறியான காரியங்களையும் முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவர். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவர். குடும்பத்தில் மதிப்பு கூடும். கட்டடப் பணியைத் துவக்குவீர்கள். பெற்றோரின் உடல்நலம் சீராகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பூர்வ புண்ணியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் நல்ல சேதி வரும். மூத்த சகோதர வகையில் உதவி உண்டு. குரு வலுவாக நிற்பதால் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். மதிப்பு உயரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்து ராகுவுடன் நிற்பதால் அலைச்சல், டென்ஷன், தூக்கமின்மை வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். கன்னிப் பெண்கள், உயர்கல்வியைத் தொடர்வார்கள். அரசியல்வாதிகளின் கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்தியால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வருவர். உத்தியோகத்தில் பனிப்போர் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உதவுவர். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிட்டும்.

பிற்பகுதியில் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்!

ழசை மறக்காதவர் நீங்கள். யோகாதிபதி சுக்கிரன் 7-ல் நிற்பதால் தைரியம் கூடும்;  மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர்கள் உதவுவர். தம்பதிக்குள் விட்டுக் கொடுக்கவும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்காதீர்கள். வீண் செலவைத் தவிர்க்கவும். 12-ஆம் தேதி வரை சூரியனும் செவ்வாயும் 8-ல் நிற்பதால் வாகன விபத்து, அலைச்சல், மனஉளைச்சல், மனைவி வழியில் மனத்தாங்கல் வந்து நீங்கும். 13-ஆம் தேதி முதல் செவ்வாயும் சூரியனும் 9-ஆம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் குறையும். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். எதிர்ப்பு அடங்கும்.

12-ஆம் தேதி முதல் ராசிநாதன் புதன் 9-ல் நுழைவதால் எதிலும் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும். கன்னிப் பெண்கள், படிப்பில் கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். குரு 10-ல் தொடர்வதால் நண்பர்கள் கூட குறை கூறுவர். வியாபாரத்தில் போதிய லாபம் உண்டு. பாக்கியைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கோபம் வேண்டாமே! உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்கவும். கலைத்துறையினர், விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவர்.

எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய நேரம் இது.

ராசிபலன்!

டமை தவறாதவர் நீங்கள். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர் அறிமுகமாவர். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பர். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியம் ஈடேறும். குரு வலுவாக இருப்பதால் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் வாகன விபத்து, டென்ஷன் வந்துபோகும். உடல்நலனில் கவனம் தேவை. 12-ஆம் தேதி வரை செவ்வாய் 7-ல் உச்சம் பெற்றிருப்பதால் உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

13-ஆம் தேதி முதல் 8-ல் மறைவதால் வீண் செலவு, சகோதரப் பகை ஆகியன வந்து நீங்கும். சனி வலுவாக இருப்பதால் துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளை சகாக்கள் ஒத்துழைப்பர். கன்னிப் பெண்களது எண்ணம் நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார்; புதிய அதிகாரி உங்களை மதிப்பார். கலைத்துறையினரின் படைப்புக்கு வரவேற்பு கிடைக்கும்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய வேளை இது.

ராசிபலன்!

வெளிப்படையாகப் பேசுபவர் நீங்கள். சுக்கிரன் 5-ல் நிற்பதால் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்கள் உதவுவர். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வர். வெளியூர் பயணம் நன்மை தரும். சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மொழியினர் அறிமுகமாவர். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சூரியனும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவர். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரியின் திருமணத்தை முன்னின்று முடிப்பீர்கள்.

பாக்கிப் பணத்தைத் தந்து, பத்திரப்பதிவு செய்வீர்கள். தாய்வழி உறவினர்களின் அன்புத்தொல்லை விலகும். பாதச்சனி தொடர்வதால் விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துபோகும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். கன்னிப் பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். அரசியல்வாதிகளே! அதிரடியாகச் செயல்பட்டு தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத்தீரும். நம்பிக்கைக்கு உரியவர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். எனினும் கவனமாகச் செயல்படுங்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும்.

சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறும் தருணம் இது.

ராசிபலன்!

ட்சியத்துடன் செயல்படுபவர் நீங்கள். குரு பகவான் வலுவாக இருப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். யோகாதிபதி சுக்கிரன் 4-ல் இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு-வாகன வசதிகள் பெருகும். திருமண காரியம் ஈடேறும். 12-ஆம் தேதி வரை பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். 13-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 6-ல் நுழைவதால் திடீர் திருப்பம் உண்டு. சொத்து வாங்குவது விற்பதிலான வில்லங்கம் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

12-ஆம் தேதி முதல் ராசிநாதன் புதன் 6-ல் மறைவதால் டென்ஷன், வேலைச்சுமை வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகை நிகழும். பயணம் திருப்தி தரும். 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானம் தேவை. கன்னிப்

பெண்களுக்கு பெற்றோருடன் இருந்த மோதல் விலகும். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். கொடுக்கல் வாங்கல், நிம்மதி தரும். மறைமுகப் போட்டியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்கள் மதிப்பர். கலைத்துறையினரின் திறமைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தடைகள் உடைபடும் தருணம் இது.

ராசிபலன்!

ரந்த மனம் கொண்டவர் நீங்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் உண்டு. குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுக்கிரன் ராகுவுடன் நிற்பதால் முதுகு வலி, சிறு விபத்து வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். சூரியனும் செவ்வாயும் சரியில்லாததால் அறுவை சிகிச்சை, சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல், செலவு ஆகியன உண்டு. பூர்வீகச் சொத்தில் பிரச்னை வரக்கூடும். அரசு காரியம் இழுபறியாகும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. குரு பகவான் 6-ல் மறைந்திருப்பதால் சந்தேகம், மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். தங்க ஆபரணத்தை இரவல் தராதீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் உங்கள் மீது வீண் பழி சுமத்துவர். கன்னிப் பெண்களுக்கு, தூக்கமின்மை, தோளில் நமைச்சல் வந்து விலகும். 11-ஆம் தேதி நண்பகல் 12.30 முதல் 13-ஆம் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானம் தேவை. அரசியல்வாதிகளின் எதார்த்தப் பேச்சை எதிர்க்கட்சியினர் தவறாகப் புரிந்துகொள்வர். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களை அனுசரிக்கவும். உத்தியோகத்தில் பிறரின் குறையைச் சுட்டிக்காட்டாதீர்கள். அதிகாரிகளுடனான பனிப்போர் நீங்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த சலுகை தாமதமாக கிடைக்கும்.

எதிலும் நிதானம் தேவைப்படும் வேளை இது.

ராசிபலன்!

விடாமுயற்சியால் வெற்றி காண்பவர் நீங்கள். சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சி நிறைவேறும். பிரபலங்கள் நண்பராவர். எதிர்பாராத பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் திறமை வெளிப்படும். ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். சூரியன், செவ்வாய், புதன் வலுவாக இருப்பதால் கௌரவம் உயரும். பூர்வீகச் சொத்திலான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு உயரும். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.  கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கோயிலில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

கன்னிப் பெண்கள் தெளிவான முடிவு எடுப்பீர்கள். 13-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 15-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்படும். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சலிப்பு, சோர்வு, பல் வலி ஆகியன வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்களை அதிரடியாக மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில் பொறுப்புகளை ஏற்பீர்கள்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்!

ன்னம்பிக்கைவாதிகள் நீங்கள். புதன் சாதகமாக இருப்பதால் நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தார் ஒத்துழைப்பர். பிள்ளைகளின் பயத்தைப் போக்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். 13-ஆம் தேதி முதல் 3-ல் சூரியனும், செவ்வாயும் அமர்வதால் திடீர் யோகம் உண்டு. அரசு மற்றும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கிலான நெருக்கடி நீங்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். குரு 4-ல் இருப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். குறுக்கு வழியில் ஆதாயம் தேடவேண்டாம். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

சனி பகவான் வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்பு ஈடேறும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் தொடர்வதால் சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழப்பீர்கள். கன்னிப் பெண்கள், பெற்றோர் சொல்படி நடப்பர். இளைய சகோதர வகையிலான மனவருத்தம் நீங்கும். 16, 17 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்; வீண் பயம் வந்து போகும். அரசியல்வாதிகள் வாக்குறுதியைக் காப்பாற்ற போராடுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு வேண்டாமே. எவரையும் நம்பி எதையும் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் மதிப்பர். கலைத்துறையினரின் முயற்சிகள் தாமதமாக நிறைவேறும்.  

சிக்கனம் தேவைப்படும் நேரம் இது.

ராசிபலன்!

ரவாரமின்றி சாதிப்பவர் நீங்கள். பாக்கியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் உதவுவர். கேது வலுவாக இருப்பதால் வாழ்வின் சூட்சுமத்தை உணர்வீர்கள். ஆன்மிகச் சான்றோரின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. 18, 19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுபச்செலவு நிகழும். வாகன வசதி பெருகும். 12-ஆம் தேதி வரை சூரியனும் செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால் டென்ஷன், தலைச்சுற்றல் வந்து போகும். 13-ஆம் தேதி முதல் உடல் நலம் சீராகும். பேச்சில் நிதானம் தேவை. தாய்வழி சொத்திலான சிக்கல் தீரும். வழக்கு சாதகமாகும். கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். அரசியல்வாதிகளே! சில வேலைகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டு போட்டியைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் ஆதரிப்பர். பங்குதாரர்களுடன் விவாதம் வந்து போகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் அறிவுரை கூறுவர். சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். கலைத்துறையினரை, மூத்த கலைஞர்கள் ஆதரிப்பர்.

தானுண்டு தன் வேலையுண்டு எனச் செயல்பட வேண்டிய தருணம் இது.

ராசிபலன்!

னசாட்சிப்படி நடப்பவர் நீங்கள். குரு பகவான் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். இழந்த செல்வாக்கை அடைவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கடனுதவி கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். 12-ஆம் தேதி முதல் பூர்வபுண்ணியாதிபதி புதன் ராசிக்குள் நுழைவதால் புத்துணர்ச்சி பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். 13-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் ராசிக்குள் நுழைவதால் வயிற்று வலி, காய்ச்சல், டென்ஷன் ஆகியன வந்து போகும். அரசு காரியத்தில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வக்கீலின் ஆலோசனையின்றி முடிவு எடுக்காதீர்கள்.

20, 21 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்; எதிலும் தாமதம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்கு திருமண முயற்சி பலிதமாகும். அரசியல்வாதிகளே! வறட்டு கௌரவத்துக்காக சேமிப்பைக் கரைக்காதீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் நெருங்கியவர்கள் சிலரே உங்களைக் குறைகூறுவார்கள். வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான மோதல் போக்கு விலகும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். கலைத்துறையினரது  சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

அனுசரித்துப் போவதால் வெற்றி பெறும் நேரம் இது.

ராசிபலன்!

னஉறுதி கொண்டவர் நீங்கள். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவர். பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். கண்டும் காணாமல் இருந்த உறவு வலிய வந்து உறவாடும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவி உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். நண்பர்கள் ஆதரிப்பர். 13-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 12-ல் மறைவதால் வீண் விரயம், செலவு, திடீர் பயணம், சகோதர வகையில் சங்கடங்கள் ஆகியன வந்து போகும்.

அரசு காரியம் இழுபறியாகும். கண்டகச் சனி தொடர்வதால் மனைவியுடன் வாக்குவாதம், கை-கால் வலி ஆகியன வந்து நீங்கும். ஜென்ம குருவும் நீடிப்பதால் சிறு அவமானம் ஏற்படும். எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். அக்கம்-பக்கத்தாருடன் அளவாகப் பழகுங்கள். கன்னிப் பெண்களுக்கு வேனல் கட்டி, முகப்பரு வந்து நீங்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினருக்கு மறைமுக விமர்சனங்கள் உண்டு.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.  

ராசிபலன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism