Published:Updated:

ராசிபலன்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்செப்டம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை

 எதிர்பார்த்த பணம் கைசேரும்!

ராசிபலன்
##~##

மேஷம்: மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குபவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை, கைக்கு வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். 20-ம் தேதி மாலை 4 மணி முதல் 22-ம் தேதி மாலை 6.30 வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சனிபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்... சோர்வு, களைப்பு, வீண் சந்தேகம் வந்து போகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்குக் கூடும்.

சாமர்த்தியம்... உச்சத்தில்!         

ராசிபலன்

ரிஷபம்: சொந்த உழைப்பில் வாழ விரும்புபவர்களே! சனிபகவான் 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், எதையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. 22-ம் தேதி மாலை 6.30 மணி முதல் 24-ம் தேதி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில், இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.          

புது வேலை... புது வாகனம்!

ராசிபலன்

மிதுனம்: எல்லோரிடமும் சமமாக பழகுபவர்களே! யோகாதிபதி சுக்கிரனும், புதனும் வலுவாக நிற்பதால், சவாலான காரியங்களைக்கூட, சமயோஜித புத்தியால் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். சனியின் போக்கு சரியில்லாததால்... வீண் டென்ஷன், இனம் தெரியாத கவலைகள் வந்து செல்லும். 25-ம் தேதி கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் சகிப்புத்தன்மை தேவை.

பிள்ளைகளால் பிரஸ்டீஜ் உயரும்!

ராசிபலன்

கடகம்: எதிரிகளும் பாராட்டும் செயல்திறன் கொண்டவர்களே! 17-ம் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால், எதிர்பார்ப்புகள் எளிதாக முடிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 4-ல் சனி அமர்ந்திருப்பதால்... வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைப் புகழ்வார்கள்.

நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும்!

ராசிபலன்

சிம்மம்: எப்போதும் நியாயத்துக்காக போராடுபவர்களே! சனியும், புதனும் சாதகமாக இருப்பதால், நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். கணவரின் திறமைகள் வெளிப்பட உதவுவீர்கள். உங்களுக்கு எதிராக, மறைமுகமாக செயல்பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். ராசிநாதன் சூரியன் 17-ம் தேதி முதல் 2-ல் அமர்வதால், உடல் நலக் கோளாறு, வீண் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் பரந்த மனதை மூத்த அதிகாரி புரிந்து கொண்டு உதவுவார்.

மன தைரியம் கூடும்!       

ராசிபலன்

கன்னி: எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்களே! ராகுவும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால், மன தைரியம் கூடும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். செல்லுமிடமெல்லாம் உங்களுக்கு முதல் மரியாதை கொடுப்பார்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். செவ்வாயும், சனியும் 2-ல் நிற்பதால்... முன்கோபம், பேச்சால் பிரச்னை ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகத்தில், அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.

உணவுக் கட்டுப்பாடு அவசியம்!

ராசிபலன்

துலாம்: விட்டுக் கொடுக்கும் மனசு கொண்டவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ராசிக்குள் செவ்வாயும், சனியும் நிற்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யோகா, தியானம் செய்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் கணிசமாக  உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

      சுக்கிரன் சாதகம்... எதிலும் வெற்றி!

ராசிபலன்

விருச்சிகம்: 'தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருப்பவர்களே! சூரியன், சுக்கிரனின் போக்கு சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி அடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. கணவரின் ரசனைக்கேற்ப உங்களின் ஆடை, அணிகலன்களை அமைத்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ராசிக்கு 12-ல் ராசிநாதன் செவ்வாயும், சனியும் அமர்ந்திருப்பதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள்                    

மன நிறைவில் மகன்... மகள்!

ராசிபலன்

தனுசு: போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் மயங்காமல் கடமையே கண்ணாக இருப்பவர்களே! செவ்வாயும், சனியும் வலுவாக இருப்பதால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன்... மகனுக்கு புது வேலை அமையும். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். ராசிநாதன் குரு சரியில்லாததால், சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம். 12, 13 ஆகிய தினங்க ளில் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில், சக ஊழியர்களின் அனுசரணை அதிகரிக்கும்.            

இல்லம் களைகட்டும்!

ராசிபலன்

மகரம்: மற்றவர்களின் துன்பம் கண்டு பொறுக்காதவர்களே! குரு வலுவாக தொடர்வதால், தொட்டது துலங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். 14-ம் தேதி முதல்  16-ம் தேதி காலை 10 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் நுழைவதால் வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில், சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.                  

கனவு மெய்ப்படும் காலம்!

ராசிபலன்

கும்பம்: சுதந்திர மனப்பான்மையும், சுய ஒழுக்கமும் உடையவர்களே! சனி 9-ம் வீட்டில் அமர்வதால், நீண்ட கால கனவு நனவாகும். பணவரவு திருப்தி தரும். புதன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்து கொள்வார்கள். 16-ம் தேதி காலை 10 மணி முதல் 18-ம் தேதி மதியம் 1.30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. சூரியனின் போக்கு சரியில்லாததால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். தாயாருடன் மனத்தாங்கல் வரக்கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.          

சோர்வு நீங்கி உற்சாகம்!

ராசிபலன்

மீனம்: எப்போதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கி, உற்சாகமடைவீர்கள். பூர்விக சொத்தால் வருமானம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 8-ல் நிற்கும் செவ்வாயுடன், சனியும் சேர்ந்ததால்... யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். 18-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 20-ம் தேதி மாலை 4 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.