Published:Updated:

ராசிபலன்கள் !

செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை

தடைகளைத் தகர்க்கும் தருணம் !

ராசிபலன்கள் !
##~##

மேஷம்: பரந்த மனசுக்கு சொந்தக்காரர்களே! செப்டம்பர் 27-ம் தேதி முதல் புதன் 7-ம் வீட்டில் நுழைவதால், தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பூர்விக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். 7-ல் நிற்கும் சனியால்  கணவர் கோபப்படுவார். நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். ராசிநாதன் செவ்வாய், செப்டம்பர் 27-ம் தேதி முதல் 8-ல் நிற்கும் ராகுவுடன் இணைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியாக திட்டம் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கேட்டது கிடைக்கும் !

ராசிபலன்கள் !

ரிஷபம்: எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! செப்டம்பர் 27-ம் தேதி முதல் செவ்வாய் 7-ல் அமர்வதால், பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். சூரியன், புதனின் போக்கு சரியில்லாததால்... உடல் உபாதை, வீண் டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். ஆனாலும், சக ஊழியர்களால் சங்கடம் ஏற்படலாம்.

நன்மைகள் தேடி வரும் !

ராசிபலன்கள் !

மிதுனம்: எதையும் ஆழமாக யோசிப்பவர்களே! சூரியன் 4-ல் நிற்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். குருவின் போக்கு சரியில்லாததால், அடுத்தடுத்து ஏற்படும் வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். செப்டம்பர் 26-ம் தேதி அநாவசிய செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.

முழு வேகத்தில் முன்னேற்றம் !

ராசிபலன்கள் !

கடகம்: அநாவசியமாக பேசுவதை விரும்பாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் இல்லம் களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். 4-ல் சனி நிற்பதால், எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். செப்டம்பர் 27, 28 ஆகிய தினங்களில் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வியாபாரத்தில்  லாபத்தை அதிகரிக்கச் செய்வீர்கள். உத்யோகத்தில் உயர்பதவி கிடைக்கும்.

அவசியம் தேவை... முன்யோசனை !

ராசிபலன்கள் !

சிம்மம்: தர்மத்துக்கு தலை வணங்குபவர்களே! செப்டம்பர் 27-ம் தேதி முதல் 4-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால், திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் வருமானம் உயரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். குரு 10-ல் தொடர்வதால், கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழலாம். செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி மாலை 6 மணி வரை சிந்தித்து முடிவெடுக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.        

திடீர் பணவரவு !

ராசிபலன்கள் !

கன்னி: தளராத தன்னம்பிக்கையாளர்களே! ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. தோற்றப் பொலிவு கூடும். பூர்விகச் சொத்தில் உங்கள் பங்கை கேட்டு வாங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலம், பலவீனத்தை கண்டறிவீர்கள். பாதச் சனி தொடர்வதால்... இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள். அக்டோபர் 1-ம் தேதி மாலை 6 மணி முதல் 3-ம் தேதி வரை எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.            

உறவு, நட்பு ஆறுதல் தரும் !

ராசிபலன்கள் !

துலாம்: அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களே! ஜென்மச் சனி தொடர்வதால்... ஒரு பக்கம் சோர்வாக இருந்தாலும், ராசிநாதன் சுக்கிரன் மற்றும் புதனும் சாதகமாக இருப்பதால்... கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் பாசமாக இருப்பார்கள். குரு 6-ல் தொடர்வதால், மிகவும் நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். அக்டோபர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

உங்கள் செல்வாக்கு உயரும் !

ராசிபலன்கள் !

விருச்சிகம்: எப்போதும் எளிமையை விரும்புபவர்களே! செப்டம்பர் 27-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்வதால்... உங்கள் தைரியம், புகழ், செல்வாக்கு கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். என்றாலும்... ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... உள்மனதில் பயம், சின்னச் சின்ன போராட்டம் வந்து போகும். அக்டோபர் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் 8-ம் தேதி வரை  அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலன் அளிக்கும். உத்யோகத்தில், அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

மக்கள் செல்வம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் !

ராசிபலன்கள் !

தனுசு: 'வளைந்து கொடுத்தால் வாழ்க்கையில் உயர்வு உண்டு’ என்பதை உணர்ந்தவர்களே! சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். கணவர் பாசமழை பொழிவார். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குருவின் போக்கு சரியில்லாததால்... மறைமுக விமர்சனம், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். அக்டோபர் 9-ம் தேதி பழைய பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில், பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.  

கனவு இல்லம் கைவசமாகும் !

ராசிபலன்கள் !

மகரம்: அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை, இப்போது நிறைவேறும். நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய உறவினர்கள், தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள்.

மனப் போராட்டம் விலகும் !

ராசிபலன்கள் !

கும்பம்: காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! செப்டம்பர் 28-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்வதால், மனப் போராட்டங்கள் நீங்கும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். குருவும், சூரியனும் சரியில்லாததால்...  வேலைச்சுமை, காரிய தாமதம் வந்து செல்லும். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

நண்பர்களால் உற்சாகம் !

ராசிபலன்கள் !

மீனம்: காலத்துக்கு ஏற்ப கோலத்தை மாற்றிக் கொள்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. செப்டம்பர் 28-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், வீட்டு பராமரிப்பில் சிறு சிறு பிரச்னைகள் வந்து போகும். செப்டம்பர் 27-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு மாறும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க நீங்கள் கொஞ்சம் போராட வேண்டி வரும்.