Published:Updated:

ராசிபலன்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் அக்டோபர் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை

வல்லமை கொடுப்பார் குரு!

ராசிபலன்
 ##~##

மேஷம்: அஞ்சா நெஞ்சம் உள்ளவர்களே! குரு வலுவாக 2-ம் வீட்டிலேயே தொடர்வதால், எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். 16-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. 17-ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் நீச்சமாகி அமர்வதால், பிள்ளைகளால் டென்ஷன், அலைச்சல் ஏற்படலாம். 18, 19 ஆகிய நாட்களில் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்  யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசிப்பார்கள்.

பணவரவு திருப்தி தரும்!

ராசிபலன்

ரிஷபம்: எப்போதும் நியாய உணர்வுடன் பேசுபவர்களே! ராசிநாதன் சுக்கிரனும், சனியும் சாதகமாக இருப்பதால்... தடைகளும், போராட்டங்களும் இருந்தாலும்... தளரமாட்டீர்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், சேமிப்புகள் கரையலாம். கணவர், பிள்ளைகள் அவ்வப்போது கோபப்படுவார்கள். 20, 21 ஆகிய தினங்களில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்        கள். உத்யோகத்தில் உங்களின்      கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

உறவினர்களால் ஆதாயம்!

ராசிபலன்

மிதுனம்: சத்தியத்தையும், சமாதானத்தையும் விரும்புபவர்களே! ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய யோசனை உதயமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். 5-ல் சனியும், 12-ல் குருவும் தொடர்வதால்... மனக்குழப்பம், தூக்கமின்மை, வீண் விரயம் வந்து செல்லும். 22, 23 ஆகிய நாட்களில் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.      

உத்யோகத்தில் பெருமை!

ராசிபலன்

கடகம்: கதை, கவிதை, கலை என கற்பனையில் சிறந்தவர்களே!  சூரியன் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவர் அனுசரணையாக இருப்பார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சனி 4-ல் நிற்பதால் வேலைச் சுமை, மறைமுக விமர்சனங்கள், தாயாருடன் கருத்து வேறுபாடு வந்து செல்லும். வியாபாரத்தில், விற்பனை அதிகரிக்கும். உத்யோகத்தில், நீங்கள் கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

வாக்கு சாதுர்யம்... வாகை சூட வைக்கும்!

ராசிபலன்

சிம்மம்: கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். தைரியம் கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் சூரியன், குருவின் போக்கு சரியில்லாததால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய் வீர்கள். பங்குதாரர்களுடனான பிரச்னை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களை யும் தாண்டி முன்னேறுவீர்கள்.              

 ஆனந்தம் அளிக்கும்...அந்தஸ்து உயர்வு!           

ராசிபலன்

கன்னி: சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து செல்பவர்களே! ராகு வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. பள்ளி, கல்லூரி கால தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். அக்கம் பக்கத்தினர் உங்களை மதிப்பார்கள். சூரியனும், சனியும் சாதகமாக இல்லாததால்... உடல் நலக் கோளாறு வரக்கூடும். வியாபாரத் தில் கடையை நவீனமயமாக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  

குழப்பம் நீங்கும்...உற்சாகம் ஊற்றெடுக்கும்!          

ராசிபலன்

துலாம்: 'எல்லோரும் நல்லவர்கள்’ என்று நினைப்பவர்களே! பாக்யாதிபதி புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், மனப் போராட்டங்கள் குறைந்து... நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். குரு 8-ல் நீடிப்பதால், யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். எதிர்பாராத பயணங் களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சாதிப்பீர்கள்.  

புதிய வாய்ப்பு கதவைத் தட்டும்!

ராசிபலன்

விருச்சிகம்: பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் நன்மை செய்பவர்களே! குரு வலுவாக இருப்பதால், பணப் புழக் கம் அதிகரிக்கும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். 16-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு காரியங்கள் உடனே முடியும். 17-ம் தேதி முதல் சூரியன் 12-ல் நீச்சமாகி அமர்வதால், மறைமுக எதிர்ப்புகள், தூக்கமின்மை வந்து செல்லும். ஏழரை சனி இருப்பதால், யாருக்காகவும் சாட்சி, கியாரன்டி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்  தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.

மனதுக்கு இதம் தருவார் மணாளன்!

ராசிபலன்

தனுசு: தர்ம வழியில் செல்பவர்களே! சூரியனும், சனியும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் பெரிய திட்டத் தில் ஒன்று நிறைவேறும். வராது   என்றிருந்த பணம் கைக்கு வரும். கண வர் உங்கள் மனதறிந்து நடந்து கொள்வார். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். குரு 6-ல் மறைந் திருப்பதால்... வீண் சந்தேகம், கவலை கள் வந்து செல்லும். 10-ம் தேதி முதல் 11-ம் தேதி நண்பகல் வரை, செயல்பாட் டில் நிதானம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

சுய பலம் அறியும் நேரம்!

ராசிபலன்

மகரம்: மனசாட்சியை மதிப்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால்... உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். 11-ம் தேதி நண்பகல் முதல் 13-ம் தேதி மாலை 6 மணி வரை சாலைகளில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. 16-ம் தேதி வரை சூரியன் 9-ல் நிற்பதால்... வீண் செலவுகள் ஏற் படலாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை ஆதரிப்பார்கள்.

சுக்கிரன் தயவில் காரிய வெற்றி!

ராசிபலன்

கும்பம்: கொடுத்து உதவும் குணம் உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால்... மனஇறுக்கம், உடல் உபாதை வந்து செல்லும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 13-ம் தேதி மாலை 6 மணி முதல் 15-ம் தேதி வரை சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

அலட்சியம், விவாதம் தவிருங்கள்!        

ராசிபலன்

மீனம்: எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்களே! செவ்வாயும், கேதுவும் சாதகமாக இருப்பதால், ஓரளவு நிம்மதி உண்டு. வாழ்வின் சூட்சமத்தை உணருவீர்கள். நிலம், வீடு... வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். முக்கிய கிரகங்களின் போக்கு சரியில்லாததால்... வாகனம், செல்போன் பழுதாகலாம். உடல் உபாதை வந்து நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடிக்க  நினைத்தா லும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 16, 17 ஆகிய நாட்களில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.