ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசிபலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்அக்டோபர் 24-ம் தேதி நவம்பர் 6-ம் தேதி வரை

புதிய திட்டங்கள் பலிக்கும்!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: சுய கௌரவத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள். சூரியன் நீச்சமாகி 7-ல் நிற்கும் சனியுடன் நிற்பதால்... வேலைச்சுமை, முன்கோபம் வந்து செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகும். மாமியாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் பொறுப்பு கள் அதிகரிக்கும்.

பண மழையில் நனையும் வேளை!

ராசிபலன்கள்

ரிஷபம்: இலக்கை எட்டும் வரை சளைக்காமல் உழைப்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். 6-ல் சூரியனும், புதனும் மறைந்திருப்பதால் , உறவினர்களிடம் இடைவெளி தேவை. பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரிசெய்வீர்கள்.      

அந்தஸ்து உயரும் தருணம்!  

ராசிபலன்கள்

மிதுனம்: எந்த நிகழ்வுகளையும் தொகுத்து வெளியிடுவதில் வல்லவர் களே! செவ்வாய் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், உலக நடப்புக்கேற்ப உங்க ளையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து ஒரு படி உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சூரியன் 5-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் பிரச்னைகள், அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும், பல சமயங்களில் கனிவாக நடந்துகொள்வார்.            

கெட்டி மேளம் கொட்டும் நேரம்!

ராசிபலன்கள்

கடகம்: தர்மசங்கடமான நேரத்திலும் நகைச்சுவையாகப் பேசுபவர்களே! புதன் வலுவாக இருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பூர்விக சொத்தால் வருமானம் வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நிச்சயமாகும். 4-ல் சனி நிற்பதால்... வீண் பழி, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். அக்டோபர் 24-ம் தேதி காலை 10 மணி முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

இன்பம் பொங்கும் இல்லம்!

ராசிபலன்கள்

சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால், பணவரவு அதிகரிக்கும். கணவர் பொறுப்பாக நடந்து கொள்வார். சுப நிகழ்ச்சிகளாலும்... தோழிகள், உறவினர்களின் வருகையாலும் வீடு களை கட்டும். ராசிநாதன் சூரியன் 3-ல் அமர்ந்தாலும், சனியுடன் நிற்பதால்... உடல் அசதி வந்து நீங்கும். அக்டோபர் 26-ம் தேதி மாலை 5 மணி முதல், 28-ம் தேதி வரை வீண் கவலைகள் தோன்றும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவு உங்களுக்கு கிட்டும்.

பயணங்கள் நிறைவு தரும்!

ராசிபலன்கள்

கன்னி: தனக்கு விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே! குரு வலுவாக இருப்பதால், யதார்த்தமாகப் பேசி மற்றவர்களை கவர்வீர்கள். சாதனையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிட்டும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். ராசிக்கு 2-ல் சூரியனும், சனியும் நிற்பதால்... உடல் உபாதை, வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். அக்டோபர் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி நண்பகல் வரை மிகவும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.                

பணமும் வரும்... செலவும் திணறடிக்கும்!

ராசிபலன்கள்

துலாம்: சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களே! செவ்வாய் ஆட்சி பெற்று 2-ல் அமர்ந்திருப்பதால், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும், எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்    களால் அலைச்சலும் உண்டு... ஆதாயமும் உண்டு. ராசிக்குள் சனி பக வானும், சூரியனும் நிற்பதால்... காரிய தாமதம் ஏற்படலாம். அக்டோபர் 31-ம் தேதி நண்பகல் முதல் நவம்பர் 2-ம் தேதி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் ரகசியங் களை வெளியிடாதீர்கள்.      

சம்பளம் உயரும்!

ராசிபலன்கள்

விருச்சிகம்: யாருக்கும் மனதாலும் துரோகம் நினைக்காதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ராசிக்குள் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்தாலும்... ராகுவுடன் நிற்பதால், மனக்குழப்பம், வீண் டென்ஷன், அலைச்சல் வந்து செல்லும். நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி காலை 11 மணி வரை பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சம்பளம் உயரும்.

முக்கிய கிரகங்கள்... லாப வீட்டில்!  

ராசிபலன்கள்

தனுசு: எல்லோரையும் உள்ளத்தால் எடைபோடுவதில் வல்லவர்களே!

முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்துத் தகராறு தீரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குரு 6-ல் நீடிப்பதால், சிலர் உங்களுக்கு தவறான புத்திமதி கூறுவார்கள். எச்சரிக்கை தேவை. நவம்பர் 5-ம் தேதி காலை 11 மணி முதல் 6-ம் தேதி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.                  

செல்லும் இடமெல்லாம் முதல் மரியாதை!  

ராசிபலன்கள்

மகரம்: போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களே! குரு வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறன் கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமை யும். வெளிநாட்டில், வேற்று மாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு, அதற் கேற்ப செயல்படுவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரி உங்களைப் பாராட்டுவார்.

உடன்பிறந்தவர் உதவிக்கரம் நீட்டுவார்!

ராசிபலன்கள்

கும்பம்:  எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே! ராசிநாதன் சனியும், செவ்வாயும் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவரின் நீண்ட நாள் கனவு நனவாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களைக் கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.  

பழைய பிரச்னைகள் தீரும்!

ராசிபலன்கள்

மீனம்: அசைக்க முடியாத ஆன்மிக பற்று உள்ளவர்களே! சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், பழைய பிரச்னைகள் தீரும். கணவரின் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் வீட்டு கல்யாணத்தை முன் நின்று நடத்துவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். 8-ல் சனியும் தொடர்வதால் வீண் விரயம், ஏமாற்றம், கவலைகள் வந்து செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய விஷயங்களில் இறங்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மன அமைதி குறைய வாய்ப்பு உண்டு. ஆனாலும், சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள்.