Published:Updated:

கணாஷ்டகம்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

கணாஷ்டகம்

ற்புதமான இந்த கணபதி ஸ்தோத்திரத்தைப் படித்து விநாயகரை வழிபட, சர்வ பாவங்களும் விலகும். ஜாதகத்தில் கேது கிரக குறைபாடுகள் இருந்தாலும், கேது தசை, கேது புத்தி காலத்திலும் இதைப் படிப்பது நல்லது.

ஏகதந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சனஸன்னிபம்
லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்

ஒற்றை தந்தம், பெருத்த சரீரத்தை உடையவரும், உருக்கிய தங்கத்துக்கு ஒப்பானவரும், தழைத்த வயிற்றை உடையவரும், அகன்ற கண்களை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

மௌஞ்ஜீக்ருஷ்ணாஜினதரம் நாகயஜ்ஞோபவீதினம்
பாலேந்துவிலஸன்மௌலிம் வந்தேஹம் கணநாயகம்

##~##
முஞ்ஜப்புல் (தர்ப்பைப் புல்லில் ஒரு வகை), மான் தோல் ஆகியவற்றை தரித்திருப்பவரும், நாகத்தை யக்ஞோபவீதமாகக் கொண்டவரும், பாலசந்திரன் பிரகாசிக்கும் சிரசை கொண்டவரும், பூதகணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தேஹம் கணநாயகம்

கணாஷ்டகம்

பார்வதியின் மனதுக்கு மகிழ்ச்சியூட்டுபவரும், ஸப்த மாத்ருகா கணங்களால் ரக்ஷிக்கப்பட்டவரும், பக்தர்களிடம் அன்பு கொண்டவரும், மதம் கொண்டவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

சித்ரரத்னவிசித்ராங்கம் சித்ரமாலாவிபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்

பலவித ரத்னங்களால் அழகிய அங்கங்களை உடையவரும், பலவித மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், பலவித ரூபத்தைத் தரித்திருப்பவரும், தேவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ணசாமரபூஷிதம்
பாஸாங்குஸதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்

யானையின் முகத்தை உடையவரும், தேவ ச்ரேஷ்டரும், காதுகளாகிய சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், பாசம்- அங்குசம் ஆகியவற்றை தரித்திருப்பவரும், தேவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

மூஷிகோத்தமமாருஹ்ய தேவாஸுரமஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தேஹம் கணநாயகம்

தேவ- அசுரர்களுக்கு இடையே ஏற்பட்ட யுத்தத்தில், சிறந்த எலியின் மீது ஏறி போர்புரிய விரும்பியவரும், சிறந்த பராக்கிரமத்தை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

யக்ஷகின்னர கந்தர்வஸித்த வித்யாதரைஸ்ஸதா
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தேஹம் கணநாயகம்

கணாஷ்டகம்

யக்ஷர், கின்னரர், கந்தர்வர், ஸித்தர், வித்யாதரர் இவர்களால் எப்போதும் ஸ்தோத்திரம் செய்யப்படுகிறவரும், மஹாத்மாவும் பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

ஸர்வவிக்னகரம் தேவம் ஸர்வவிக்னவிவர்ஜிதம்
ஸர்வஸித்திப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்

தடைகளை உண்டாக்கி அறிவுறுத்துபவரும், தடைகளை நீக்குபவரும், சர்வ ஸித்திகளை கொடுப்பவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.

கணாஷ்டகமிதம் புண்யம் பக்திதோ ய: படேந்நர:
விமுக்தஸ்ஸர்வபாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி

புண்ணியமான கணாஷ்டகம் என்ற இந்த ஸ்தோத்திரத்தை பக்தியோடு படிப்பவர் சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டு ஸ்ரீகயிலாசத்தை அடைவர்.

அடுத்த கட்டுரைக்கு