

ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார் ராகு. திறமைகள் வெளிப்படும். வீண் விவாதம், மன உளைச்சல்கள் விலகும். எந்த விஷயத்திலும் சுயமாக முடிவெடுங்கள். தம்பதியர் இடையே சந்தோஷம் நிலைக்கும். 7-ஆம் வீட்டில் ராகு அமர்வதால் மனைவியுடன் சிறு விவாதங்கள் ஏற்படும். அதைப் பெரிதுபடுத்தவேண்டாம். மனைவிக்கு ரத்த அழுத்தம், கர்ப்பப்பை கோளாறு வந்து நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வாய்க்கும். அரசு வேலை விரைந்து முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். மாணவர்களுக்கு விளையாடும்போது சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில், அணுகுமுறையை மாற்றுவீர்கள். 7-ஆம் வீட்டில் ராகு வந்து அமர்வதால் கூட்டுத்தொழிலில் குழப்பங்களும், பிரிவுகளும் வரும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டட வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்ளுங்கள். பதவி உயரும். கணினித் துறையினருக்கு வேலை அதிகரித்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கலைத் துறையினர், போராடி வெற்றி பெறுவர்.
கேதுவின் பலன்கள்: கேது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால், சமயோசித புத்தியுடன் பேச வைப்பார். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்தும், கடன்கள் குறித்தும் கவலை எழும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், பண வரவு உண்டு; திடீர் செலவுகளால் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். சாலைகளைக் கடக்கும்போது கவனம் தேவை. வாகனம் வாங்குவீர்கள்; வீடு கட்டுவீர்கள். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச்சல் வந்துபோகும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். குறிப்பாக, அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
சொத்து வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில், கொடுக்கல்- வாங்கலில் நிம்மதியுண்டு. பங்குதாரர்களுடன் விவாதங்கள் எழும்; பொறுத்துப் போகவும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக்கான வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். எனினும், மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடைய வைக்கும்.