Published:Updated:

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம்

Published:Updated:
ரிஷபம்
ரிஷபம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுவின் பலன்கள்:
ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். குடும்பத்தார் பாசத்துடன் நடப்பர். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். மனைவியின் ஆரோக்கியம் கூடும். தந்தை வழி உறவினர் களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

வருமா வராதா என்றிருந்த பணம் வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய் வீர்கள். எதிரிகளிடத்தும் உங்களின் மதிப்பு உயரும். பயணங்கள் திருப்தி தரும்.

ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் அஷ்டம - லாபாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவர். தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். புது வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 14.2.14 முதல் 21.6.14 வரை, உங்களின் சப்தம-விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு- மனை வாங்குவீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். கட்டடப் பணிகளைத் தொடர பணம் கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் கைகூடும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியரின் நினைவாற்றல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும் அரவணைப்பும் கிட்டும்.

வியாபாரத்தில் புது யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். வெளிநாட்டு நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், தொந்தரவு தந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். கணினித் துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய வாய்ப்பு தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: கேது இப்போது 12-ல் சென்று அமர்கிறார். உங்களின் அகமும் முகமும் மலரும். தயக்கம், முன்கோபம், விரக்தி விலகும். ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். தடைப்பட்டிருந்த மகனின் திருமணம் முடியும். உங்களுக்கான மருத்துவச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படினும், ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும்.

ரிஷபம்

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வரலாம். வேலை அதிகரிக்கும். சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். அரசு காரியங்கள் நல்லவிதமாக முடியும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  உங்கள் ராசிநாதனும் - சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கௌரவ பதவி தேடி வரும். கேது, தமது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், சுற்றியுள்ளவர்களின் பலம்- பலவீனம் அறிந்து செயல்படுங்கள். தூக்கம் குறையும். குடும்பத்தில் சச்சரவு எழும். கையிருப்பு கரையும். பயணங்கள் அதிகரிக்கும். வேற்றுமொழி, இனத்தவரால் ஆதாயம் உண்டு. சொந்த  ஊரில் செல்வாக்கு உயரும்.

பிரபலங்களின் அறிமுகத்தால் சில தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில், பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சம்பளம்- பதவி உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களுக்கு அதிரடியான முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.