Published:Updated:

கடகம்

கடகம்

கடகம்

கடகம்

Published:Updated:
கடகம்
கடகம்

ராகுவின் பலன்கள்: ராகு பகவான், 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் வந்து அமர்கிறார். 5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம், நடந்து முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாம்பத்தியம் இனிக்கும். உங்களின் குடும்பப் பிரச்னைக்குக் காரணமானவர்களை விலக்குவீர்கள். வழக்கு சாதகமாகும். விலகிப்போன நண்பர்கள்- உறவினர்கள், இனி வலிய வந்து உறவாடுவர். ராகு 4-ல் அமர்வ தால் தாயாருக்கு ரத்த அழுத்தம், நரம்புக்கோளாறு ஏற்படலாம். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
சஷ்டம-பாக்யாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், இழுபறியான வேலைகள் முடிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு- மனை யோகம், மகனுக்கு வேலை, மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடன் கிடைக் கும். ராகு 7.6.13 முதல் 13.2.14 வரை தமது சுய நட்சத்திரமான சுவாதியில் செல்வதால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சிறு விபத்து

கள் நிகழலாம். புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. சிலர், வீடு மாற வேண்டியது வரும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் - தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் செலவுகள் கட்டுப்படும். சொத்துச் சேர்க்கை, உத்தியோகத்தில் உயர்வு உண்டு. சகோதர-சகோதரிகளுடனான மனக்கசப்பு நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.  கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். லேசாக தலைச்சுற்றல் வரும் என்பதால், மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை.

கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வர். மாணவர்கள் உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவர். அரசியல் வாதிகளுக்கு, கௌரவப் பதவிகள் தேடிவரும். வியாபாரத்தில், ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறார் தேவை. உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரியை விமர்சிக்கவேண்டாம். கணினித் துறைனருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

கேதுவின் பலன்கள்:  கேது 10-வது வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு பதற்றம், வேலைகளில் அலைச்சல் உண்டு. வி.ஐ.பி-கள் ஆதரிப்பர். மூத்த சகோதரருடனான கருத்து மோதல்கள் விலகும். குடும்பத்தில் மதிப்பு உயரும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் உண்டு.

கடகம்

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் யதார்த்தமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். சுக லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர் உதவுவர். வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். திருமணம் கூடிவரும். மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. கேது தமது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் பணவரவு உண்டு. திடீர் செலவுகளும் உண்டு. உத்தியோகத்தில் எதிர்ப்புகளும் இடமாற்றமும் இருக்கும். சொத்து வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசாங்க வரிகளை முறைப்படி செலுத்திவிடுங்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சின்னச்சின்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டியது வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி ஓய்வெடுக்க முடியாதபடி உங்களை கசக்கிப் பிழிந்தாலும், இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரியவைப்பதாக அமையும்!