Published:Updated:

சிம்மம்

சிம்மம்

சிம்மம்

சிம்மம்

Published:Updated:
சிம்மம்
சிம்மம்

ராகுவின் பலன்கள்: ராகு பகவான், 2.12.12 முதல் 21.6.14 வரை, உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கும் நீங்கள் எதிர்பார்த்தது போன்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கூடிவரும். சிலர், வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலன் மேம்படும். வீண் பயம், கனவுத் தொல்லைகள் நீங்கும். இளைய சகோதரரிடம் மனஸ்தாபம் வந்தாலும் பாசம் குறையாது.  

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும்-அட்டமாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வ தால் பயம், கவலை விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நாடாளுவோர் அறிமுகமாவர். மகளுக்குத் திருமணம் முடியும். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வ தால், தைரியமாக முடிவெடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.                       உங்களின் சுகாதிபதியும்-பாக்கியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் குடும்ப வருமானம் உயரும். பழைய சொத்து வந்துசேரும். மீதிப்பணம் தந்து சொத்தை கிரயம் செய்வீர்கள். புதிய பொறுப்புகள், பதவிகள் வரும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவர். கன்னிப் பெண்கள் பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள்.அரசியல்வாதிகள், ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். ஷேர், கமிஷன், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். கணினித் துறையினருக்கு அயல்நாடு செல்ல வாய்ப்பு அமையும். கலைஞர்களுக்கு, பெரிய நிறுவனங் களில் வாய்ப்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: கேது இப்போது ராசிக்கு 9-ஆம் இடத்தில் வந்து அமர்வதால், வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் குழப்பம் அகலும். மூத்த சகோதரர் உதவு வார். இளைய சகோதரியின் திருமணத்தை சிறப்பாக முடித்து வைப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சம்பளம்- பதவி உயர்வு உண்டு. 9-ஆம் இடத்தில் கேது அமர்வதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

சிம்மம்

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். உங்கள் திருதிய - ஜீவன ஸ்தானாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் தைரியமாக முடிவெடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் உதவுவர். வீடு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.06.14 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்

களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.  பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில், கேது அலைக்கழித்தாலும் ராகுவின் அனுக்கிரகம் அதிரடி முன்னேற்றத்தைத் தரும்!