Published:Updated:

கன்னி

கன்னி

கன்னி

கன்னி

Published:Updated:
கன்னி
கன்னி

ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். செலவுகள் கூடும். வேலைகள் தடைப்பட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க்கவும். கண், காது, பல் வலி வரலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுக்க வேண்டாம். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் மற்றொரு மருத்துவரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். புது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடனான மனக் கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணம் இனிதே முடியும். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் கடனை திருப்பித் தருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சுக-சப்தமாதி பதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு களைகட்டும். சிலர், சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். ராகு தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் ஆரோக்கியம் பாதிக்கும். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். உங்களின் திருதிய -அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் நிலம், வீடு வாங்குவது- விற்பதில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். மின்சார சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பத்திரங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வழக்குகளில் இழுபறி ஏற்படும். கன்னிப் பெண்களுக்கு அலட்சியம், பயம் விலகும். நகைகளை கவனமாகக் கையாளுங்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள்.

வியாபாரத்தில், புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், மோதல்போக்கு மறையும். புதிய பதவி வாய்க்கும். கணினி மற்றும் கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

கேதுவின் பலன்கள்: கேது இப்போது உங்களின் ராசிக்கு 8-ல் வந்தமர்கிறார். அலைச்சல், பயம் ஏற்படும். சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். மனைவியுடன் விட்டுக்கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் பொறுமை அவசியம்.

கன்னி

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் விரய ஸ்தானாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபச் செலவுகள்  உண்டு. வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம். உங்களின்  தன- பாக்கியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடிவரும்.

கணவன்- மனைவிக்குள் மனக்கசப்புகள் நீங்கும். வீடு- வாகனம் சேரும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், தூக்கம் குறையும். விபத்துகள் வந்து நீங்கும். சிலர், உங்கள் மீது வீண் பழி சுமத்தினாலும் கலங்காதீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு வரும்.  

கேது 8-ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். மற்றவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிக வேலையின் காரணமாக வீட்டுக்கு தாமதமாகச் செல்ல நேரிடும் ஆதலால், குடும்பத்தில் சின்னச்சின்ன கருத்து மோதல்கள் வரும்.  

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்களின் பலம்- பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்!