

ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் பிரச்னைகள் குறையும். இடம் அறிந்து பேசும் கலையை அறிவீர்கள். செலவுகள் சுருங்கும். பண வரவு உண்டு.ஏற்கெனவே, உங்கள் ராசிக்குள் சனியும் இருப்பதால் நீரிழிவு, யூரினரி இன்ஃபெக்ஷன், ஹார்மோன் கோளாறு மற்றும் தலை, தோள் பட்டையில் வலி வந்துபோகும். முன்கோபம், சிறு வேலைகளிலும் சிக்கல் ஏற்படும். எனினும், உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு ராகு நட்புக் கிரகமாக வருவதால், அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள்.
##~## |
ராசியில் நிற்கும் ராகு சலிப்பை உண்டாக்குவார். வீண் பகை, மனக் கசப்புகள் வரும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். அயல்நாட்டு பயணங்கள் தேடிவரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப் பெண்கள், முக்கிய விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளவும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். மாணவர்களுக்கு, போட்டிகளில் பரிசு- பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி குறைகூற வேண்டாம்.
வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடியுங்கள். பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். புது ஆர்டர்களை போராடி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் வரும். கலைத் துறையினரின் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்புகள் வந்துசேரும்.

கேதுவின் பலன்கள்: கேது இப்போது ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். வீண் பயம் விலகும். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து போகவும். சொத்துப் பிரச்னை, பங்காளி சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசு காரியங்களில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை எவரிடமும் சொல்ல வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், முன்கோபத்தால் புது பிரச்னைகள் உருவாகும். புது முதலீடுகள், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் வேண்டாம். உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர். வீடு- மனை, வாகனம் வாங்குவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். கேது, தனது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். உறவினர்கள் இடையேயான மனஸ்தாபங்கள் விலகும். 7-ல் கேது அமர்வதால், கூட்டுத்தொழிலை தவிர்க்கவும். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறன் கூடும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, நீங்கள் எதிர்நீச்சலில் வெற்றி பெற்று சாதிக்கவைப்பதாக அமையும்.