Election bannerElection banner
Published:Updated:

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

ராகுவின் பலன்கள்: ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை ராசிக்கு 12-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால் நோய் நீங்கும். சந்தோஷம் கூடும். உங்களை அலட்சியப்படுத்தியவர்களும் வலியவந்து பேசுவர். வேலைகள் உடனடியாக முடியும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். வர வேண்டிய பணம் தாமதமின்றி வரும். வீட்டில் தொடர்ந்து நல்லது நடக்கும். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்குக் கிடைக்கும்.        

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தன-பூர்வ புண்ணியாதிபதியான விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள், பூர்வீகச் சொத்து, ஷேர் மூலம் பணம் வந்து சேரும். மகளின் திருமணம்; மகனுக்கு வேலை... எல்லாம் நல்லபடியாக முடியும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை ராகு செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடிவரும். உங்கள் ராசி நாதனும் - சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபமாக முடியும். கடனை அடைப்பீர்கள்.

பிள்ளைகளை உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தந்தையுடனான மனக் கசப்புகள் நீங்கும்; தாயின் உடல்நிலை சீராகும். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். கன்னிப்பெண்களின் மனம் தெளிவாகும்; வேலை கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். அரசியல்வாதிகள், தலைமையிடம் நல்ல பெயரெடுப்பீர்கள்.  

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகள் செய்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி லாபம் தரும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். கணினித் துறையினருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கலைஞர்களுக்கு புகழ், வருமானம் உயரும்.

கேதுவின் பலன்கள்:  கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவர். பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

விருச்சிகம்

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பளம் உயரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரைகுறையாக நிற்கும் கட்டடப் பணியைத் தொடங்குவீர்கள்.   உங்களின் சப்தம-விரயாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ரசனைக்கேற்ற வீடு- வாகனம் அமையும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.  கேது, தனது சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், சிக்கல்கள் தீரும். எதிர்பாராத பணவரவு உண்டு. மகான்களிடம் ஆசி பெறுவீர்கள்.

கேது 6-ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்திசாலித் தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை வாங்கிக் கொடுப்பீர்கள். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி-சம்பள உயர்வு உண்டு.  

இந்த ராகு-கேது பெயர்ச்சி, வாழ்வில் பல ஏற்றங்களைக் காண வைப்பதாக அமையும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு