Published:Updated:

தனுசு

தனுசு

தனுசு

தனுசு

Published:Updated:
தனுசு
தனுசு

ராகுவின் பலன்கள்: ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசியின் லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும், பண வரவையும் தருவார். செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவர். உயர் கல்வியில் வெற்றி பெறுவர். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்னைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும்- சுகாதிபதியுமான விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும்; அவர் வழி உறவினர் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். ராகு, தமது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விரயாதிபதியும் - பூர்வ புண்ணியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். குலதெய்வத்திடம் குழந்தைபேறு பொருட்டு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். அரசியல்வாதிகள், இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள்.

வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடனான மோதல் போக்கு மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பதவி - சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் வரும்; சம்பள பாக்கியும் வந்துசேரும்.

கேதுவின் பலன்கள்:  கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் உண்டு. அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப் பற்றாக்குறை ஏற்படும். தந்தைக்கு நெஞ்சு வலி, வேலைச்சுமை வந்துபோகும். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சஷ்டம - லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பண வரவு அதிகரிக்கும். புது வேலை அமையும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கௌரவ பதவிகள் தேடி வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். உறவினர் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். கேது, தனது சுய நட்சத் திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மூச்சுப் பிடிப்பு, ரத்தசோகை, சிறுநீர்ப் பாதையில் அலர்ஜி வரக்கூடும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகை களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி - சம்பள உயர்வை கொஞ்சம் போராடி பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில் கேதுவால் ஞானமும், ராகுவால் வசதியும், நிம்மதியும் கிட்டும்.