Published:Updated:

மகரம்

மகரம்

மகரம்

மகரம்

Published:Updated:
மகரம்
மகரம்

ராகுவின் பலன்கள்: ராகு 2.12.12 முதல் 21.6.14 வரை உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து அமர்கிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை கிட்டும். உழைப்புக்கான நற்பலனை அடைவீர்கள். குல தெய்வத்தை மறக்காதீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும் - விரயாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகு செல்வதால், தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ராகு, தனது சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால், உத்தியோகத்தில் இடமாற்றம் வேலைச்சுமை  உண்டு. எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். எவருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சுக - லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 வரை ராகு செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துபோகும். புது வேலை கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்றுவிட்டு வேறு சொத்து வாங்குவீர்கள்.          

ராகு 10-ல் வருவதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். மகனின் திருமணம் சிறப்புற நடந்தேறும். கன்னிப்பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போகவும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால்தான் லாபம் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி, நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், முக்கிய ஆவணங் களைக் கையாளும்போது கவனம் தேவை. கணினித் துறையினருக்கு பதவி- ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு, புது வாய்ப்பு கதவை தட்டும்.

கேதுவின் பலன்கள்: கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், பக்குவம் கூடும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மகனை படிப்பு- வேலையின் பொருட்டு வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள்.

மகரம்

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் அஷ்டமாதி பதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேது செல்வதால், மறைமுக எதிர்ப்பு கள் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவர். அரசாங்க வரிகளை உடனடியாகச் செலுத்துங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பண உதவி, மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். கேது தனது சுய நட்சத்திரமான அசுவினியில் 12.10.13 முதல் 21.6.14 வரை செல்வதால் மன இறுக்கம், வீண் டென்ஷன் வந்துபோகும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணம், நகைகளை கவனமாக கையாளுங்கள்.

கேது 4-ஆம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும்போது யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக்கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பாராட்டு, பதவி உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, தொலைநோக்கு சிந்தனையால் உங்களை வெற்றிபெற வைக்கும்!