

ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு ராகுபகவான் இப்போது 9-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். செயல்களை எளிதில் முடிப்பீர்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சுபகாரியம் கூடி வரும். குழந்தை இல்லாதவர்க்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். கையில் பணம் புரளும். குலதெய்வக் கோயில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
##~## |
வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். இரும்பு, பருத்தி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் ஆதாயம் தரும். அரசு காரியத்தில் கவனம் தேவை. ராகு பகவான் 9-ல் நுழைவதால் உங்களின் மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை குறையும். கணினித் துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும். கலைத் துறையினரின் சம்பளப் பாக்கி கைக்கு வந்துசேரும்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது 3-வது வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் கூடும். சங்கடங்கள் தீரும். பணஉதவி கிடைக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். தாயாரின் உடல்நிலை சீராகும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேதுபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் உதவுவர். அரசால் ஆதாயம் உண்டு. உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உதவுவர். தந்தை வழி சொத்து வந்து சேரும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.6.14 வரை கேது செல்வதால் தைரியம் பிறக்கும்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாட்டில் இருப்பவரால் ஆதாயம் உண்டு. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவுவர். வியாபாரத்தில். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவர். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டுவார். வெளிநாட்டுத் தொடர்பு உடைய நிறுவனத்தில் இருந்து வாய்ப்பு வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
மொத்தத்தில், ராகுவால் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், கேதுவால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டாகும்.