மீனம்
மீனம்

ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ல் அமர்ந்திருந்த ராகு பகவான் இப்போது, எட்டில் சென்று மறைகிறார். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். தம்பதிக்குள் சிறு விவாதம் ஏற்படும். ராகு 8-ல் அமர்வதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.  

##~##
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.12 முதல் 6.6.13 வரை ராகுபகவான் செல்வதால் பணம் வரும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். செலவு, வாகன விபத்து, மறைமுக விமர்சனம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.13 முதல் 13.2.14 வரை செல்வதால் எந்த விஷயத்தையும் போராடி முடிப்பீர்கள். எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். பித்தத்தால் தலைச்சுற்றல், வயிற்று வலி ஆகியன ஏற்படும். உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.14 முதல் 21.6.14 முடிய திடீர் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது- விற்பது நல்லவிதமாக முடியும். மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள், பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம் ஆகியன வந்துபோகும். பிள்ளைகள், உயர்கல்வியில் தேர்ச்சி பெறுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு மாறுவீர்கள். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். திருமணம் தடைப்பட்ட பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும். மாணவர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். அரசியல்வாதிகள் அவசர முடிவைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் நயமாகப் பேசி பாக்கியை வசூல் செய்யுங்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் ஆகியன ஆதாயம் தரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். சலுகைகளுடன் பதவியும் உயரும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவர்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 2-வது வீட்டில் நுழைகிறார். பல்வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். கையிருப்பு கரையும். மகளின் திருமணம் நடந்தேறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும்.

மீனம்

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் 2.12.12 முதல் 2.2.13 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர் நண்பராவர். அரசியல்வாதிகள் உதவுவர். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். கடனில் பாதியை அடைப்பீர்கள். உங்கள் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.13 முதல் 11.10.13 வரை கேது செல்வதால் இளைய சகோதரர் ஆதரிப்பார். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழியினர் உதவுவர். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் 12.10.13 முதல் 21.06.14 வரை கேது செல்வதால் பணப்பற்றாக்குறை, டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்துபோகும். அடுத்தவருக்கு உதவுவதில் கவனம் தேவை. வழக்கில் அலட்சியம் வேண்டாம். கேதுபகவான் 2-ஆம் வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் கவனமாக இருங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.

இந்த ராகு-கேது பெயர்ச்சி, உங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு