Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்

ராசிபலன்

ராசிபலன்

Published:Updated:

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை

மேஷம்

இளகிய மனம் கொண்டவர்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன்

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்ப தால், எதிர்பாராத பணவரவு உண்டு. சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். குரு 12-ல் நீடிப்பதால்... வீண் விரயம், ஏமாற்றம் வந்து போகும். 24-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 26-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும்.

எதிலும் வெற்றி பெறும் வேளையிது.  

  ரிஷபம்

அச்சுறுத்தலுக்கு அஞ்சாதவர்களே!

ராசிபலன்

சூரியன், புதன், செவ்வாய் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவர் மனம் விட்டு பேசுவார். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். 26-ம் தேதி மாலை 6 மணி முதல் 28-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் எச்சரிக்கை தேவை. 24-ம் தேதி வரை மறைந்து நிற்கும் சுக்கிரன், 25-ம் தேதி முதல் 9-ல் அமர்வதால், களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். 5-ல் சனி நிற்பதால், மனக்குழப்பம் வந்து விலகும். வியாபாரத் தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

  மிதுனம்

சுற்றியிருப்பவர்கள் சுகமாக வாழ பாடுபடுபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் புதன் 9-ம் வீட்டில் நிற்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால், செவ்வாயுடன் நிற்பதால்... முன்கோபம் வந்து விலகும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். 1-ம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால், எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

நாவடக்கம் தேவைப்படும் தருணமிது.    

  கடகம்

'நாடு உயர நாம் உயர்வோம்’ என்ற தேசியச் சிந்தனை உள்ளவர்களே!

ராசிபலன்

குரு பகவான் வலுவாக இருப்பதால், தெய்வ பலத்தால் முன்னேறுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. 24-ம் தேதி வரை 6-ல் மறைந்திருக்கும் சுக்கிரன், 25-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால்... அலைச்சல், டென்ஷன் குறையும். சூரியன், புதன், செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால்...  பண இழப்பு ஏற்படலாம். கணவருக்கு உடல் உபாதை  வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சூட்சமங்களை அறிந்து கொள்ள வேண்டிய வேளையிது.  

  சிம்மம்

அதிரடி திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே!

ராசிபலன்

சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். 24-ம் தேதி வரை சுக்கிரன் 5-ல் நிற்பதால்... புது வீடு வாங்க, கட்ட உதவி, வங்கிக் கடன் கிடைக்கும்.  25-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவருக்கு அலைச்சல், வீண் டென்ஷன் வந்து நீங்கும். ராசியை மூன்று கிரகங்கள் பார்ப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

   கன்னி

எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்துபவர்களே!

ராசிபலன்

யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். கணவர் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார். தாயாரின் உடல் நலம் சீராகும். ராசிநாதன் புதன் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் பழி, தோழிகளுடன் கருத்து வேறுபாடு வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி  களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

சவால்களில் வெற்றி பெறும் காலமிது.

 துலாம்

தடை வந்த போதும் தளராதவர்களே!  

ராசிபலன்

பாக்யாதிபதி புதன் 5-ல் நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பூர்விக சொத்தை புதுப்பிப்பீர்கள் 25-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் ராகுவை விட்டு விலகுவதால்... உடல் உபாதை நீங்கும். 5-ல் செவ்வாயும், சூரியனும் இருப்பதால் இனம் தெரியாத கவலை, தாழ்வு மனப்பான்மை வந்து விலகும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தாமதமான ஒப்பந்தம் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

யோகா, தியானம் தேவைப்படும் நேரமிது.

விருச்சிகம்

மனக் கோட்டை கட்டினாலும், ஒருபோதும் பணக் கோட்டைக்கு அடிமையாகதவர்களே!

ராசிபலன்

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். கணவர் அனுசரணையாக இருப்பார். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். ராகு, கேதுவின் நிலை சரியில்லாததால் வீண் செலவு, ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

செல்வாக்கு அதிகரிக்கும் தருணமிது.

 தனுசு

கடினஉழைப்பால்சாதிப்பவர்களே!

ராசிபலன்

3-ல் சூரியன், செவ்வாய், புதன் சாதகமாக இருப்பதால் தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும்.  மகளுக்கு நல்ல வரன் அமையும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், அதிகம் பேச வேண்டாம். 16, 17 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் ஏற்றுமதி வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

பிரபலங்களால் பாராட்டப்படும் நேரமிது.

 மகரம்

எதையும்ஆழமாகயோசிப்பவர்களே!

ராசிபலன்

25-ம் தேதி முதல் யோகாதிபதி சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால், நிம்மதி கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் வரும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால் பேச்சால் பிரச்னை, உடல் உபாதை வந்து நீங்கும். 18, 19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்பட வேண்டாம். வியாபாரத் தில் லாபம் வரும். வேலையாட்கள் அனுசரணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும்.

தைரியமான முடிவுகள் எடுக்கும் தருணமிது.

 கும்பம்

மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவபர்களே!

ராசிபலன்

ராசிக்குள் புதன் நிற்பதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. பிள்ளைகள் தேர்வை நல்ல முறையில் எழுதுவார்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு.  ராசிக்குள் சூரியனும், செவ்வாயும் நிற்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். 20-ம் தேதி முதல் 22-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், நிதானத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள்.  உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.  

அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரமிது.  

 மீனம்

மன்னிக்கும்குணம்கொண்டவர்களே!

ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.  தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள்.  சூரியன், செவ்வாய், புதன் 12-ல் மறைந்திருப்பதால்... அதிக செலவுகள், டென்ஷன் வந்து போகும். கணவர் கோபப்படலாம். 22-ம் தேதி காலை 10 மணி முதல் 24-ம் தேதி மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் வேண்டாம்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் வேளையிது.