Published:Updated:

மேஷம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

மேஷம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
மேஷம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திலும் முதலிடத்தைப் பிடிக்க நினைப்பவர் நீங்கள். உங்களது ராசிக்கு 4-ஆம் வீடான சுக வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. இழுபறியாக நின்ற வேலைகள் பூர்த்தியாகும். மனக்குழப்பம் நீங்கும். சந்தோஷம் நிலைக்கும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த ஆடை- ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

புது வருடம் ஆரம்பிக்கும்போது உங்களின் ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். சொத்து ஒன்றை விற்று, பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள்.

1.1.13 முதல் 2.2.13 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் கவனம் தேவை. 3.2.13 முதல் 11.10.13 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் பரணி நட்சத்திரக்காரர்கள் மனஉளைச்சல், ஆரோக்கிய குறைபாடுகளைச் சந்திப்பர். 12.10.13 முதல் டிசம்பர் வரையிலும் கேது அசுவினியில் செல்வதால், இந்த காலகட்டத்தில் அசுவினி நட்சத்திரக்காரர் களுக்கு, பயணங்களில் கவனம் தேவை. சிறு சிறு ஏமாற்றங்கள் வந்துபோகும்.

10.4.13 முதல் 26.5.13 வரையிலும் உங்களின் ராசிநாதன் செவ்வாய், பாபக் கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனம் அடைவதால், வீடு- மனை வாங்குவது, பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.  வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் தொடர்வதால் சாதிக்கும் எண்ணம் பிறக்கும். ஆனால், எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வரக்கூடும். சிலர், உங்களைப் பயன்படுத்தி முன்னேறுவர். ஆடம்பரம் வேண்டாம். ராசிக்குள் கேது நிற்பதால், எதிலும் ஒரு சலிப்பு, சோர்வு, தலைச்சுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் குரு தொடர்வதால் எதிர்பாராத வகையில் பணவரவும், உதவிகளும் கிடைக்கும். செலவுகளும் தொடரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். குடும்பத்தில் மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அதிக வட்டிக் கடனை

பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். ஆனால், மே 29-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் குரு அமர்வதால், சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த சிலர் இழுத்தடிப்பர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரருடனான மனத் தாங்கல் நீங்கும். வருடம் முழுக்க ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி நிற்பதால், எதிலும் திட்டமிடல் தேவை. எவருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும்.

வியாபாரிகள், பெரிய முதலீடுகளையும் கடன் கொடுப் பதையும் தவிர்க்கவும். பங்குதாரர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் லாபம் உண்டு. ஹோட்டல், கட்டட பொருட்கள், இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ் தர்களுக்கு, உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்ற வருத்தம் மேலிடும். மேலதிகாரியை அனுசரித்து செல்லுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. கன்னிப்பெண்கள், தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பர். மாணவர்கள், கல்வியில் அதீத கவனம் செலுத்துவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு, புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும்.

முன்கோபத்தைத் தவிர்த்து, ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வருடம் இது.

மேஷம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism