Published:Updated:

ரிஷபம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ரிஷபம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ரிஷபம்
##~##
நா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்டு நடப்பை நன்கு அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சேமிக்கத் துவங்குவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவர். வழக்குகள் சாதகமாகும்.

புத்தாண்டு பிறக்கும்போது சந்திரன் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால், முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பிரச்னைகளை சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

10.5.13 முதல் 6.7.13 வரை உடல் உஷ்ணம் அதிகமாகும். கார உணவுகளைத் தவிர்க்கவும். மே மாதம்

வரை ஜென்ம குரு நீடிப்பதால் அடிக்கடி கோபம் எழும். சில நேரங்களில் நிம்மதியின்றி தவிப்பீர்கள். உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக

நீங்களே முடிவு செய்யாதீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். 29.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், கனிவு பிறக்கும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கைமாற்று கடனையும் அடைப்பீர்கள்.பிள்ளைகளை நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவர். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைப் புறக்கணித்த உறவினரும் தேடி வருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அரசு தொடர்பான

காரியங்கள் முழுமையடையும். 12-ஆம் வீட்டில் கேது

தொடர்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும்.

சில காரியங்களில் அலைச்சல் உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். எவருக்கும் ஃபைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம்.

வியாபாரிகள், தங்களின் அணுகுமுறையை மாற்றி லாபம் ஈட்டுவார்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள்

கூடிவரும். கெமிக்கல், ஹோட்டல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பணிகளில் இருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருட தொடக்கத்திலேயே பதவி- சம்பள உயர்வு உண்டு. புதிய வாய்ப்புகளை

எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங் களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

கன்னிப்பெண்கள், உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும்; கண்ணுக்கு அழகான கணவர் அமைவார். தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மாணவர்கள், அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை- கட்டுரை, இலக்கியப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி பரிசு- பாராட்டுகளை பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகளை கட்சித் தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சிக்காதீர்கள். கலைத் துறையினர், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். அரசால் ஆதாயம் உண்டு.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அடிப்படை வசதிகளை உங்களுக்கு அமைத்துக் கொடுப்பதுடன், உங்களை சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

ரிஷபம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism