Published:Updated:

மிதுனம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

மிதுனம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
மிதுனம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்கு யோசித்து முடிவெடுப்பவர் நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். குழப்பம் ஏற்படுத்திய உறவினர்- நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

வருடம் பிறக்கும்போது ராகு 5-ஆம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன்

தேடும்போது, மணமகனின் பழக்கவழக்கங்களை நன்கு விசாரித்து முடிவெடுக்கவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஒற்றை தலைவலி, ரத்தசோகை, மூட்டுவலி

வரக்கூடும். எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பீர்கள்.

தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயத்தில் கவனம் தேவை. கேது 11-ஆம் வீட்டில்

தொடர்வதால், வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்று கடனையும்

அடைப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டிலிருக்

கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பி-களின் நட்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடு ஆகும். ராசிக்கு 5-ஆம் வீட்டில் சனி தொடர்வதால், பிள்ளைகள் உங்களைப் புரிந்து

கொள்ளாமல் பேசுவர். அவர்களின் அடிமனதில் இருப்பதை அறிந்து நிறைவேற்றப் பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி,

உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய நேரிடும்.

மே 28-ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், வீண் செலவுகள் அதிகமாகும். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காக கொஞ்சம் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். மே 29-ஆம் தேதி முதல் வருடம் முழுவதும் ஜென்ம குரு நீடிப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. எவர் மீதும் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம். அடிக்கடி கோபம் எழும். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும். குடிநீரை கொதிக்க வைத்து குடியுங்கள். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்துகொள்ளாமல் பேசுவர். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது நல்லது. வீட்டு லோனில் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்கு தர்மசங்கடத்தில் மூழ்கக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். எவருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.  

ராசிக்கு 6-ஆம் வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது புத்தாண்டு

பிறப்பதால், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். செவ்வாய் 8-ல் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து விஷயங்களை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்கள் எழலாம். அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள்.

வியாபாரிகளே!  மற்றவர்கள் பேச்சை நம்பி பெரிய முதலீடுகள்

செய்ய வேண்டாம். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவசாலிகளை பணியில் அமர்த்துவீர்கள். உணவு, எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், கட்டட உதிரிபாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய பங்கு

தாரர்களை சேர்ப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, வருட முற்பகுதியில் வேலை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றமும் உண்டு. வருடத்தின் பிற்பகுதியில் மன நிம்மதி உண்டு. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

கன்னிப்பெண்கள், பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம். உடல் உஷ்ணத்தால் வயிற்றுவலி, வேனல்கட்டி வந்து நீங்கும். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், உட்கட்சிப் பூசலில் தலையிட வேண்டாம். பதவியைத் தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். கலைத் துறையினருக்கு, தடைப்பட்டிருந்த வாய்ப்பு இனி தேடி வரும். உங்களின் படைப்புகள் குறித்த கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், புதிய அணுகுமுறையால் வெற்றிபெற வைக்கும்.

மிதுனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism