Published:Updated:

கடகம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

கடகம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
கடகம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ள்ளம் கபடமற்றவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது, இந்தப் புத்தாண்டு பிறப்ப தால், எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும்.

வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் துவங்குவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களைப் புறக்கணித்த உறவினரும் இனி வலிய வந்து பேசுவர். தடைப்பட்டிருந்த வீட்டுப் பணியை தொடர, வங்கி லோன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை- ஆபரணம் சேரும். எனினும், உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.அவ்வப் போது உடல்நிலை லேசாக பாதிக்கும்.

மே 28-ஆம் தேதி வரை குரு பகவான் லாப வீட்டில் நிற்பதால் பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சிப்பீர்கள். திடீர்யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். உங்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும். மதிப்பு கூடும். பெரிய பதவிகள் தேடி வரும்.

மே 29-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள், வேலைகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். 7-ல் செவ்வாய் நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு வரும். முன்கோபத்தைக் குறையுங்கள். உடன்பிறந்த வர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை.

இந்த வருடம் முழுக்க ராசிக்கு 4-ஆம் வீட்டில் சனியும் ராகுவும் அமர்ந்திருப்பதால், தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச் சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். நெடுந்தூர, இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.

6-ஆம் வீட்டில் சூரியன் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால் எதிரிகளும் நண்பர்களாவர். அரசு விஷயங்கள் சாதகமாகும். சொத்து சேரும். தடைப்பட்ட காரியங்களை முழு வேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். தகப்பனாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவர் வழி சொத்தை அடைவதில் இருந்த தடைகளும் நீங்கும். ஜூன் மாதத்திலிருந்து குரு 12-ஆம் வீட்டுக்கு வருவதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவு உண்டு. மனைவிக்கு அவ்வப்போது மருத்துவச் செலவு வந்துபோகும்.  

வியாபாரிகளே... வியாபாரத்தைப் பெருக்க விளம்பரங் களுக்கு செலவு செய்வீர்கள். பக்கத்து கடைக்காரருடனான கருத்து மோதல்கள் விலகும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபம் உண்டு. அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து, மன்னிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழிலில் கால் பதிக்கும் முன் அனுபவசாலிகளிடம் ஆலோசித்து செயல்படுங்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு, பதவி - சம்பளம் உயரும். மேலதிகாரி சிலநேரம் உங்களிடம் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்காக சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.

கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.  நண்பர்களுடன் கருத்து மோதல், விளையாட்டில் சிறுசிறு காயங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள், தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத் துறையினர், வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவர்.பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அனுபவம், சகிப்புத் தன்மையால் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.

கடகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism