Published:Updated:

சிம்மம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சிம்மம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
சிம்மம்
##~##
பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துமை விரும்பி நீங்கள். தைரிய ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம், பண வரவு உண்டு. பழைய பிரச்னைகள் ஓயும். சவாலான விஷயங்களையும் சாதாரண மாக முடிக்கும் வல்லமை பிறக்கும்.

குடும்பத்தில் மதிப்பு கூடும். பழைய சொத்து ஒன்றை எதிர்பார்த்த விலைக்கே விற்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும். புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நிற்பதால், தொட்டது துலங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சொந்த வீட்டு கனவு நிறைவேறும்.

உங்களுக்கு 12-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சலும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும்.     வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகு தொடர்வதால்

புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். வழக்கு சாதகமாகும். போட்டி- பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதரருடனான மனஸ்தாபம் விலகும். அவர் மூலம் உதவிகளும் உண்டு. 9-ஆம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். அப்பாவுக்கு நெஞ்சுவலி, மூட்டுவலி வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்கள் வெடிக்கும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. சொந்த ஊர் கோயில் திருவிழாவை சொந்த செலவில் நடத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.

28.5.13 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் தொடர்கிறார். அதுவரையிலும் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய நேரிடும். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகள், இடமாற்றங்கள் வரக்கூடும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களை பகைக்க வேண்டாம். எவருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வராதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். அவ்வப்போது, பழைய கடன் பிரச்னைகள் மனதை வாட்டும்.

மே 29-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ல் அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். பண வரவு அதிகரிக்கும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதமாக முடியும். தடைப் பட்டிருந்த வீடு கட்டும் பணியை இனி தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனின் திருமணம் சிறப்புற நடக்கும். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள்.

வியாபாரிகளுக்கு, பற்று - வரவு உயரும். சனி 3-ல் சாதகமாக இருப்பதால், பிரபலங்களின் உதவியோடு கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், துணிக் கடை, ஹோட்டல் வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். புது ஒப்பந்தங்கள் கூடிவரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஜுன் மாதத்திலிருந்து பதவி-சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களின் ஆதரவுடன் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கன்னிப்பெண்கள், போலியான நண்பர்களை விலக்குவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு நல்ல  குணம் கொண்ட கணவர் அமைவார். மாணவர்களுக்கு, விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைக் கண்டுகொள்ள வேண்டாம்.

கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் தள்ளிப்போனது அல்லவா? இனி, பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வசதி- வாய்ப்புகளையும், பதவி மற்றும் பணவரவையும் பெற்றுத் தருவதாக அமையும்.

சிம்மம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism