Published:Updated:

கன்னி

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

கன்னி

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
கன்னி
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்னிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். சிலருக்கு, பிள்ளை பாக்கியம் உண்டு. தடைப்பட்டிருந்த கல்யாணம், கிரகப்பிரவேசம் நல்லவிதமாக நடந்தேறும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையின் உடல்நிலை சீராகும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், வருமானம் உயரும். பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர- சகோதரிகளுடனான மனத் தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் வேலையை, இனி விரைந்து முடிப்பீர்கள். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். செவ்வாய் 5-ஆம் வீட்டில் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளிடம் கெடுபிடி வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் பாடப் பிரிவில் போராடி சேர்ப்பீர்கள். அரசு அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம்.

கர்ப்பிணிகள் உணவு, மருந்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதிக்கவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பது நல்லது. சொத்து வாங்குவது-விற்பதில் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மே 29-ஆம் தேதி முதல், குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால், வேலை அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம். முக்கிய பணிகளை நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.

புத்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால், வீண் விவாதங்களைத் தவிருங்கள். காலில் அவ்வப்போது அடிபடும். கண் பரிசோதனையும் அவசியம். எவரையும் விமர்சிக்க வேண்டாம். திடீர் பண வரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. எனினும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டி லேயே ராகுவும் தொடர்வதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.

குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் எழும். கேது 8-ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். கை- காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டுவலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். தம்பதிக்குள் பிரச்னை வந்தாலும் ஒற்றுமைக்குக் குறையிருக்காது.

வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அவசியம்.

வியாபாரிகள், பெரிய முதலீடுகளைத் தவிருங்கள். வேலையாட்களை அனுசரித்து செல்லவும். கமிஷன், ரியல் எஸ்டேட், அரிசி - எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகஸ்தர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், பணியில் கூடுதல் கவனம் தேவை. வேலைச்சுமை, உயரதிகாரிகளால் அலைக்கழிப்பு ஏற்படலாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் நேரிடும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தகுதியான கணவன் அமைவார். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. அரசியல்வாதிகள், தலைமையிடம் விட்டுக்கொடுத்து போகவும். கலைஞர்களுக்கு, அரசாங்கத்தின் பாராட்டு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிக்கனம் மற்றும் மௌனத்தின் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

கன்னி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism