Published:Updated:

துலாம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

துலாம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
துலாம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ற்றவர்களின் வருத்தங்களை புரிந்து உதவும் குணம்  கொண்டவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 10-வது வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர் கள். சாணக்கியத்தனத்துடன் பேசி காரியம் சாதிப்பீர்கள்.உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தைத் திருப்பித் தருவார்கள். நீங்களும் கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகனின் திருமணம் இனிதே நடந்தேறும்.

புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் 4-ஆம் வீட்டில் இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு, வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். வருடம் பிறக்கும்போது ராசிக்குள் ராகு நிற்பதால் எதிலும் ஒருவித தயக்கம், படபடப்பு, நெஞ்சு வலி வந்து நீங்கும். முன்கோபம் அதிகரிக்கும். யோகா, தியானம், எளிய உடற்பயிற்சிகள் அவசியம்.

7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்குள் ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படும். வாழ்க்கைத் துணை உங்களின் நிறை- குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால், மறைமுக பணவரவு உண்டு; செலவுகளும் இருக்கும். வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். வாகனத்தில் செல்லும்போது அதீத கவனம் தேவை.

மே 29 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்வதால் சாதிப்பீர்கள். போராட்டங்கள் ஓயும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பதவிகள் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவியுடனான பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

புது வேலை கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தந்தையின் உடல் நிலை சீராகும். அவருடனான கருத்து மோதல்களும் விலகும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ், கௌரவம், செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். முதுகுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். நல்ல வேலை அமையும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகைகளை உடனுக் குடன் செலுத்துவது நல்லது.

ஜென்மச்சனி தொடர்வதால், மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப்பும் அவசியம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் வழியில் அலைச்சலும் செலவும் இருக்கும். எவருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரிகள், சந்தை நிலவரங்களை அறிந்து புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். ஃபர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசாங்க நெருக்கடி கள் நீங்கும். வேலையாட்களும்  பங்குதாரர்களும் பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவர். வியாபாரம் செழிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, எவரும் குறை சொல்லமுடியாத நிலை உருவாகும். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். சக ஊழியர்களால் மறைமுகமாக சில பிரச்னைகள் எழலாம். கன்னிப்பெண்களுக்கு, உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். தாயாரின் ஆதரவு உண்டு. ஆடை- ஆபரணங்கள் சேரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.  விட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு அவ்வப்போது மறதி - மந்தம் ஏற்படலாம். படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. அரசியல்வாதிகளுக்கு வேலை அதிகரிக்கும். கட்சி அறிவிக்கும் போராட்டங்களில்

பங்கேற்று, தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, தடைப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் இனி வீடு தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அவ்வப்போது உங்களுக்கு சுகவீனங்களைத் தந்தாலும், தன்னம்பிக்கையால் வெற்றிபெற வைப்பதாக அமையும்!

துலாம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism