Published:Updated:

விருச்சிகம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

விருச்சிகம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
விருச்சிகம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்மானம் மிகுந்தவர் நீங்கள். உங்களுக்கு 9-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களின் ஆளுமைத்திறனும் கையில் பணப் புழக்கமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ரசனைக்கேற்ற வீடு- வாகனம் அமையும்.

வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 3-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வீடு- மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மகளின் கல்யாணம் சிறப்புற நடக்கும். வி.ஐ.பி-களின் ஆதரவு உண்டு. சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் இனிமை கூடும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்டவும், வாங்கவும் வங்கி லோன் கிடைக்கும். புது வேலைக்கான முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பழைய கடன் பிரச்னை தீரும்.

ராசிக்கு 6-ஆம் வீட்டில் கேது சாதகமாக இருப்பதால், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். புது பொறுப்பு

களும், பதவிகளும் தேடி வரும். பழைய பிரச்னைகளுக்கு, மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து, அயல்நாடு சென்று வருவீர்கள். ராகு 12-ஆம் வீட்டில் மறைந்திருப்பதால், மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதையும் சிலர் தவறாகப் புரிந்துகொள்வர். சொத்து வழக்கில் வழக்கறிஞரை மாற்றுங்கள். மே 28-ஆம் தேதி வரையிலும் உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், வரவேண்டிய பணம் வந்துசேரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். மே-29 முதல் குரு 8-ல் மறைவதால் வேலை, செலவுகள் அதிகரிக்கும். தம்பதிக்குள் மனஸ்தாபம் எழும். கை- காலில் அடிப்படக்கூடும்.

சனி பகவான் ராசிக்கு 12-ஆம் வீட்டில்... ஏழரைச் சனியின் ஒரு பகுதியான விரயச்சனி தொடர்வதால்,  இனம் புரியாத கவலைகள் வந்து செல்லும். ஓரளவு பண வரவும் உண்டு. சிலர், உங்களை தவறாகப் புரிந்துகொள்வர்.

இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. அரசு அதிகாரிகள், வி.ஐ.பி-களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். காசோலை தருவதற்கு முன்பு, வங்கியில் கையிருப்பை அறியவும்.

வியாபாரிகளே... தரமான சரக்குகளை வாங்கி புது சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. ஃபர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் நீசப்பொருட்களால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, உங்க ளின் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.  

கன்னிப்பெண்கள், கூடா பழக்கவழக்கம் உள்ளவர்களிடம் இருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர் கணவனாக அமைவார். மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் பிறக்கும்; சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் எனும் வைராக்கியத்துடன் படிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பற்றிய வீண் வதந்திகள் நீங்கும். கட்சி மேலிடத்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். கலைஞர்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பாராட்டப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறு சிறு தடைகள்- ஏமாற்றங்களைத் தந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

விருச்சிகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism