Published:Updated:

தனுசு

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

தனுசு

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
தனுசு
##~##
தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராள மனம் கொண்டவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும் போது, சனி உங்களின் லாப வீட்டில் தொடர்கிறார். திடீர் செல்வாக்கு, புகழ் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பழைய மனையை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். கடன்கள் அடைபடும். வழக்குகள் சாதகமாகும். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆபரணம் சேரும். நாடாளுபவர்கள் உதவுவர்.

மே 28-ஆம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், வீண் டென்ஷன், வேலைச்சுமை, காய்ச்சல் என வந்து செல்லும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். சில காரியங்களை பலதடவை முயன்று முடிக்க வேண்டியது வரும். பணம்- நகை, வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். சிக்கனமும் அவசியம். வீண் சந்தேகத்தால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும்.

மே - 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 7-ல் நுழைவ தால், துடிப்புடன் செயலாற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய சொத்து ஒன்றை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

உங்களுக்கு 8-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புது வருடம் பிறக்கும்போது, 2-ஆம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால், வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். சிலர், வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை நீங்களே முன்னின்று  முடிப்பது நல்லது. கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். அவர்களின் உயர் கல்வி, உத்தியோகம் தொடர்பாக அலைச்சலும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் எழலாம். பூர்வீகச் சொத்துப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் நகை, பணம் வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

ராகு, உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் தொடர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய பதவிகள் தேடி வரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரிகள், தள்ளுபடி விலையில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை அழகுப்படுத்துவீர்கள். வேலையாட்களால் டென்ஷன் ஏற்படலாம். மருந்து, என்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிவர். புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பதவி- சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்னைகள் மட்டுமின்றி, அதிகாரியின் சொந்தப் பிரச்னைகளையும் தீர்த்துவைப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். சிலருக்கு, புது வேலை கிடைக்கும்.

கன்னிப்பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். தாமதமான கல்யாணம், வருடத்தின் பிற்பகுதியில் நல்லவிதமாக முடியும். மாதவிடாய்க் கோளாறு, தலைசுற்றல், தூக்கமின்மை நீங்கும். மாணவர்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

அரசியல்வாதிகள், ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். சகாக்கள் சிலர், உங்களைப் புகழ்வது போன்று இகழ்வார்கள். கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகள் எதுவானாலும் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, ஆரம்பத்தில் உங் களை அலைய வைத்தாலும், பிறகு எதிர்பாராத பண வரவையும் வெற்றிகளையும் தரக்கூடியதாக அமையும்.

தனுசு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism