Published:Updated:

மகரம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

மகரம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
மகரம்
##~##
பெ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ற்ற தாயையும், பிறந்த மண்ணையும் அதிகம் நேசிப்பவர் நீங்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில், புத்தாண்டு பிறக்கிறது. திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். ஷேர் மூலம் பணம் வரும். செவ்வாய் உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி நிறைவேறும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வீடு வாங்குவது- கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் கூச்சல் - குழப்பம் விலகும். தாம்பத்தியம் இனிக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு, மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தின் பங்கு கைக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சென்று மறைவதால் மறைமுக விமர்சனங்கள், ஏமாற்றம், இழப்பு, கவலைகள் ஏற்படும். வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். தம்பதிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க நேரிடும். உறவினருடன் பகை வரக்கூடும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகும்.

கேது 4-ஆம் வீட்டில் நிற்பதால் முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். தாயாருக்கு கை- கால் மற்றும் முதுகு வலி வந்துபோகும். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த சோகை வரக்கூடும். ஆனால் 10-ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் சவால்களை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். கடன் வாங்கியவர்கள் திருப்பித் தருவர். எனினும், வேலைச்சுமையும் வீண் பழியும் வரக்கூடும். சனி உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் தொடர்வதால், உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். வி.ஐ.பி-களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து தகராறு தீரும். உடல்- உள்ளச் சோர்வு வரும். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது.

வியாபாரிகள், அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பார்கள். பணியாளர்களிடம் கவனம் தேவை. புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில், விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் இனி அலைக்கழிப்புகள் இருக்காது. எதிர்பார்த்த பதவி - சம்பள உயர்வு உண்டு. ஆனாலும், 10-ல் சனி தொடர்வதால் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

கன்னிப்பெண்களுக்கு பேச்சில் அனுபவ முதிர்ச்சி வெளிப்படும். காதிருந்ததற்கு ஏற்ப நல்ல கணவர் அமைவார். மாணவர்கள், கடைசி நேரத்தில் படிக்கும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உயர் கல்வியில் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு, கொஞ்சம் அலைச்சலும் போராட்டமும் உண்டு. கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். அரசியல்வாதிகள், உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்க்கட்சியினர் குறித்த விமர்சனமும் வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் செயல்பட்டு, சாதிக்கப் பாருங்கள். கலைத் துறையினரை, பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டின் முற்பகுதி முன்னேற்றப் பாதையைக் காட்டினாலும், பிற்பகுதியில் தொலை நோக்குச் சிந்தனையின் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

மகரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism