Published:Updated:

கும்பம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

கும்பம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
கும்பம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டுத்தவர்களின் குறை-நிறைகளை சாமர்த்தியமாக சுட்டிக்காட்டுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது, புத்தாண்டு பிறக்கிறது. மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காரியம் நடப்பதற்காக மட்டுமே உங்களின் காலைப் பிடிக்கும் சிலரை, இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வீண் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் துவங்குவீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினரால் ஆதாயம் உண்டு.

உங்களுக்கு 6-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள், அலைச்சல்கள், செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். உங்கள் ராசிநாதன் சனி 9-ஆம் வீட்டில் அமர்ந்திருக் கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணியைத் துவக்குவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். வழக்குகள் சாதகமாகும். உறவினர், நண்பர்களின் சுயரூபத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவீர்கள். சிலருக்கு, புது வேலை அமையும். வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

வருடம் முடியும் வரை 3-ஆம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். ஆனால், இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். 9-ஆம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால், 'எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசு அதிகாரி களை பகைக்க வேண்டாம்.

மே 28-ஆம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தாயாருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். அவருக்கு நெஞ்சுவலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். கடனை போராடி வசூலிப்பீர்கள். அரசாங்க வரிகளை உரிய காலகட்டத்தில் செலுத்திவிடுங்கள். வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேச வேண்டாம்.  மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் நுழைவதால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். பண வரவு உண்டு. மழலை பாக்கியம் உண்டு. மகளின் தடைப்பட்ட திருமணம், இப்போது கூடிவரும். வீடு கட்டி குடிபுகுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

வியாபாரிகள், வாடிக்கையாளரின் தேவையறிந்து கொள்முதல் செய்வது அவசியம். நீண்டநாளாக செய்ய நினைத்த மாற்றங்களை ஜூன் முதல் செய்வீர்கள். விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுக நிலை ஏற்படும். புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள், உங்களது ஆலோசனையை ஏற்பர்.

உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தின் எல்லா நடவடிக்கை களிலும் உஷாராக இருங்கள். ஜூன்  முதல் பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு தொல்லை தந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார்.

கன்னிப்பெண்கள், விடுபட்ட பாடத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்று, வேலையில் சேர முயற்சியுங்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வர். மாணவர்கள், 'தேர்வில் வெற்றி நிச்சயம்’ என்று தப்புக்கணக்கு போடாமல், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு.

அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். கலைஞர்கள், விமர்சனங்கள் குறித்து அஞ்ச மாட்டார்கள். மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவர்.

மொத்தத்தில், இந்த புத்தாண்டின் மையப்பகுதியில் இருந்து அதிரடி யோகம் உண்டு.

கும்பம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism