Published:Updated:

மீனம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

மீனம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
மீனம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னிய பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், உங்களின் செல்வம்- செல்வாக்கு உயரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் சுக்கிரன் வலுவாக நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், விரக்தி விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு கட்ட பல வழிகளில் இருந்தும் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். குல தெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புது வேலை கிடைக்கும். கைமாற்றாக வாங்கிய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள்.

மே 28-ஆம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் நிற்பதால், கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும். சில காரியங்களில் தடைகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி, பிள்ளை களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். மற்றவர்களின் பேச்சை நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்கவேண்டாம். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டுவலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் எழலாம். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். நண்பர்களில் சிலர், உங்களை தவறான பாதைக்கு திருப்பலாம்; கவனம் தேவை.

வழக்கு விஷயங்களில் சற்றே பின்னடைவு ஏற்படும்.

ராசிக்கு 2-ஆம் வீட்டில் கேது நிற்பதால் பேச்சில் காரம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ராசிக்கு 8-ஆம் வீட்டில் ராகு நிற்பதால், தம்பதிக்குள் சிறு சிறு மனஸ்தாபம் எழும்; விட்டுகொடுத்து போகவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வருடம் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள், பண இழப்பு, வீண் பழி, வழக்குகள் வந்து நீங்கும்.

வியாபாரிகள், பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்வீர்கள். மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் மோதல்கள் எழலாம். உத்தியோகஸ்தர்களுக்கு, மேலதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்பட்டாலும், உங்களை நம்பித்தான் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு.  

கன்னிப்பெண்கள், பெற்றோரை அனுசரித்து செல்லவும். உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். மாணவர்கள், அன்றைய பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுங்கள். கணிதம், அறிவியலில் கூடுதல் கவனம் தேவை.

அரசியல்வாதிகள், கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒருபுறம் விமர்சனங்கள் இருந்தாலும், மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு... எதிலும் அகலக்கால் வைக்காமல், ஆழம் பார்த்து காலை விடவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

மீனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism