Published:Updated:

ராசிபலன்

ஜனவரி 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை

ராசிபலன்

ஜனவரி 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை

Published:Updated:

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

 அவசியம் தேவை... அமைதியான போக்கு!

ராசிபலன்
##~##
மேஷம்:
தன்மானத்தை உயிர்மூச்சாக கருதுபவர்களே! குருபகவான் வலுவாக 2-ம் வீட்டில் நிற்பதால், பணவரவு திருப்தி தரும். புது வாகனம் வாங்குவீர்கள். ராகுவும், சனியும் 7-ல் நிற்பதால்... சோர்வு, பதற்றம் வந்து செல்லும். கணவர்  உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள். 8, 9 ஆகிய தேதிகளில் எதிலும் நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள், முக்கிய முடிவுகள் எடுக்கும்போது உங்களை கலந்தாலோசிப்பார்கள்.        

சகோதர வகையில் மகிழ்ச்சி!

ராசிபலன்

ரிஷபம்: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! செவ்வாய் 9-ம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வீடு வாங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். ஜென்ம குரு தொடர்வதால், மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 10, 11 ஆகிய தினங்களில் உடல் நலம் பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.  

புது தெம்பு பிறக்கும்!

ராசிபலன்

மிதுனம்: மகிழ்வித்து மகிழ்பவர்களே! 5-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் நுழைவதால், புது தெம்பு பிறக்கும். தடைபட்ட வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.  நட்பு வட்டம் விரியும். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால், கணவருடன் விவாதம் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். 12, 13 ஆகிய நாட்களில் அதிக உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

பாராட்டு மழையில் நனையும் நேரம்! 

ராசிபலன்

கடகம்: கடலளவு அன்பு கொண்டவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். 9-ம் தேதி முதல் புதன் 7-ல் நுழைவதால், சுறுசுறுப்பாவீர்கள். உறவினர், தோழிகளுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். 5-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், உடல் நலக் கோளாறு ஏற்படலாம். 14, 15 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நெளிவு, சுளிவு களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.                        

மாலை சூடும் வேளை!

ராசிபலன்

சிம்மம்: தோல்வி கண்டு துவளாதவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய யோசனைகள் உதயமாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். ராசிநாதன் சூரியன் 5-ல் நிற்பதால், அரசாங்க விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். 9-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால்... வேலைச்சுமை, வீண் செலவு வந்து செல்லும். உறவினர், தோழிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.          

மனதைக் குளிர்விப்பார் மணாளன்!

ராசிபலன்

கன்னி: இளகிய மனசு கொண்டவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கணவர் உங்கள் மீது பாசமழை பொழிவார். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். செவ்வாய் 5-ல் நிற்பதால்... பிள்ளைகளால் செலவு, டென்ஷன் வந்து போகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமுகமாக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் பரந்த மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.        

சூரியனால்... காரிய வெற்றி!

ராசிபலன்

துலாம்: விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையாக செயல்படுபவர்களே! 13-ம் தேதி வரை சூரியன் வலுவாக இருப்பதால், எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். பணவரவு உண்டு என்றாலும், சேமிப்புகளும் கரையும். ராசிக்குள் ராகுவும், சனியும் நிற்பதால்... வீண் விரயம், சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் உண்டு. முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.    

திறமைகள் வெளிப்படும்!

ராசிபலன்

விருச்சிகம்: மலர்ந்த முகத்துடன், உபசரித்து உதவுபவர்களே! குரு வலுவாக இருப்பதால், மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விருப்பப்பட்ட டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். 13-ம் தேதி வரை அரசு காரியங்கள் இழுபறியாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால், தடைகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிரான அதிகாரி இடம் மாறுவார்.

விசேஷங்களில் முதல் மரியாதை!

ராசிபலன்

தனுசு: நியாயத்துக்காக போராடுபவர்களே! ராகுவும், சனியும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். 14-ம் தேதி வரை சூரியன் ராசிக்குள் நிற்பதால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து செல்லும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். கடையை விரிவுபடுத்திக்கட்ட முடிவெடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார்.

போட்ட திட்டம் நிறைவேறும்!

ராசிபலன்

மகரம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! ராசிக்குள் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். திடீர் பணவரவு உண்டு. உறவினருடன் இருந்த ஈகோ பிரச்னை தீரும். சூரியனின் போக்கு சரியில்லாததால்... மன இறுக்கம், உடல் உபாதை வந்து நீங்கும். 2-ம் தேதி முதல் 3-ம் தேதி மாலை 5 மணி வரை வீண் வாக்குவாதம் வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடியாக சில முடிவுகள் எடுப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.    

உதவிகள் கிடைக்கும்! ! 

ராசிபலன்

கும்பம்: தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே! 13-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்டறிவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டில் இருக்கும் உறவினர், தோழிகளால் உதவிகள் கிடைக்கும். குருவும், செவ்வாயும் சரியில்லாததால்... திடீர் பயணங்கள், சகோதரவகையில் மனத்தாங்கல் வந்து போகும். 3-ம் தேதி மாலை 5 மணி முதல் 5-ம் தேதி இரவு 9.30 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி சரிசெய்வீர்கள்.        

பிள்ளைகளால் மனநிறைவு!

ராசிபலன்

மீனம்: அறிவுப்பூர்வமாக எதையும் யோசிப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்த்தவற்றில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். பிள்ளைகள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள். ராகுவும், சனியும் 8-ல் நிற்பதால், பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். 5-ம் தேதி இரவு 9.30 மணி 7-ம் தேதி வரை செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.