Published:Updated:

ராசிபலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் ஜனவரி 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை

ராசிபலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் ஜனவரி 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை

Published:Updated:

 பண மழை பொழியும்!

ராசிபலன்கள்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேஷம்: தள்ளி நின்று வேடிக்கை பார்க்காமல் தவறுகளைத் திருத்து பவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்க ளின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மாமனார், மாமியார் உங்களுக்கு  முக்கியத்துவம் தருவார்கள். அயல்  நாட்டில் இருக்கும் தோழியால் ஆதாய மடைவீர்கள். 7-ல் சனி, ராகு நிற்பதால் நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன், சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத் தில் வரவு உயரும். உத்யோகத்தில் மேல திகாரி உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்.

 பிரச்னைகளுக்கு முடிவு!

ராசிபலன்கள்

ரிஷபம்: பெரிய குறிக்கோளுடன் வாழ்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய கோணத்தில் சிந்தித்து, பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிள்ளை களின் கலைத்திறனை கண்டறிந்து வெளிக் கொணர்வீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர் கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங் களின் தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும்.      

எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்!

ராசிபலன்கள்

மிதுனம்: சலனப்படாமல் சங்கடங்களை எதிர்கொள்பவர்களே! கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்பு களை எளிதாகச் சமாளிப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 22-ம் தேதி வரை செவ்வாய் 8-ல் நிற்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். 23-ம் தேதி முதல் செவ்வாய் 9-ல் நுழைவதால், கணவருடன் இருந்த மோதல்கள் விலகும். சொத்து வாங்கு வது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். சூரியன் சரியில்லாததால், அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். மற்றவர்களை நம்பி புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

வீடு கட்டும் யோகம்!

ராசிபலன்கள்

கடகம்: பிறர் சுதந்திரத்தில் தலையிடாத வர்களே! புதனும், குருவும் சாதகமாக இருப்பதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். சுக்கிரன், சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால், கணவர் கடந்த கால கசப்புச் சம்பவங் களைப் பேசினாலும் எதிர்த்துப் பேச வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் சுமார்தான். போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வேலைச்சுமை அதிகரிக்கும்.      

பலம், பலவீனம் அறியும் நேரம்!

ராசிபலன்கள்

சிம்மம்: உண்மையை உரக்கச் சொல்பவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வருமானம் உயரும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிதாக வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். புதன் 6-ல் மறைந் திருப்பதால்... உடல் உபாதை, உறவினர் களுடன் விரிசல்கள் வரக்கூடும். 16-ம் தேதி மாலை 3 மணி முதல் 18-ம் தேதி வரை எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, தகுந்த முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

சுப நிகழ்ச்சிகளால் கலகலப்பு!

ராசிபலன்கள்

கன்னி: மன்னிக்கும் குணம் உள்ளவர் களே! குரு வலுவாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர் பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 5-ல் சூரிய னும், (22-ம் தேதி வரை) செவ்வாயும் 5-ல் நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து செல்லும். உறவினர்களுடன் விவாதங் களைத் தவிர்க்கவும். 19-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 9.30 மணி வரை அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங் கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள் முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.    

நிதி நிர்வாகம்... சூப்பர்!

ராசிபலன்கள்

துலாம்: நாசூக்காக பேசத் தெரிந்த வர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அடுக்கடுக் கான செலவுகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். பூர்விக சொத்தை புதுப்பிப்பீர் கள். உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். ராசிக்குள் சனியும், ராகுவும் தொடர்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உபாதை வந்து நீங்கும். உங்கள் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி, பின்னர் நெளிய வேண்டாம். 21-ம் தேதி காலை 9.30 மணி முதல் 23-ம் தேதி இரவு 9 மணி வரை வீண் விவாதங்களைத் தவிருங்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை தாண்டி லாபம் சம்பாதிப் பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.

 தைரியம் பிறக்கும்!

ராசிபலன்கள்

விருச்சிகம்: விடாமுயற்சியும், விவேகமும் அதிகமுள்ளவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால், தடுமாற்றம் நீங்கி, தைரியம் பிறக்கும். பிள்ளைகளின் கல்யாண விஷயம் சாதகமாக முடியும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப சொத்து வாங்குவீர்கள். 23-ம் தேதி இரவு 9 மணி முதல் 26-ம் தேதி காலை 8.30 மணி வரை எதிலும் கூடுதலாக பொறுமை காப்பது நல்லது. 12-ல் ராகுவும், சனியும் தொடர்வதால்... திடீர் பயணங்கள், செலவுகள், தூக்கமின்மை வந்து செல் லும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து நீங்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

 நீண்ட நாள் ஆசை நிறைவேறும் !

ராசிபலன்கள்

தனுசு: தன்னலம் கருதாமல் உதவி வாழ்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறை வேறும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். ராசிநாதன் குரு, 6-ல் மறைந் திருப்பதால்... மறைமுக விமர்சனம், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். சிலரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். 26-ம் தேதி காலை 8.30 மணி முதல் 28-ம் தேதி மாலை 6 மணி வரை உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. வியாபா ரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அலைச்சல் இருந்தாலும், அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும்.     

மகனுக்கு மணவாழ்க்கை அமையும் !

ராசிபலன்கள்

மகரம்: கலகலப்பாக பேசி காரியம் சாதிப்பவர்களே! குரு 5-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்விக சொத்தால் வருமானம் வரும். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து மணப்பெண் அமைவார். குலதெய்வப் பிரார்த்த னையை குடும்பத்தினருடன் சென்று நிறை வேற்றுவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால்... உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். 28-ம் தேதி மாலை 6 மணி முதல் 29-ம் தேதி வரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவல கத்தில் சக ஊழியர்களைவிட அதிகாரி களிடம் செல்வாக்கு கூடும்.      

வெற்றிக் கனி பறிக்கும் வேளை !

ராசிபலன்கள்

கும்பம்: பரந்த மனசுடன் அனைவரையும் நேசிப்பவர்களே! கேது 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால்... சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பூர்விக சொத்தை விற்று, புது வீடு, மனை வாங்குவீர்கள். வருமானத்தைப் பெருக்க சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்களின் மனசு மாறும். சூரியன், செவ்வாயின் சஞ்சாரம் சரியில்லாததால்... தூக்கமின்மை, சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் வந்து செல்லும். சமையலறையில் நெருப்பு, மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத் தில் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.    

மனக் கட்டுப்பாடு தேவை !

ராசிபலன்கள்

மீனம்: சோர்ந்து வருபவர்களுக்கு ஆறுதல் அளிப்பவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். சனியும், ராகுவும் 8-ல் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக உணர்வீர்கள். கணவர் கடிந்து கொண்டால், பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்காதீர்கள், உறவினர் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோ கத்தில் உங்களை யாரேனும் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள்.