Published:Updated:

ராசிபலன்கள்

ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள்

ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:

செல்வாக்கு கூடும்!

ராசிபலன்கள்
##~##

மேஷம்: மற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்பவர்களே! சூரியன் வலுவாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது வாகனம், கணினி வாங்குவீர்கள். பிப்ரவரி 4-ம் தேதி காலை 8.30 மணி முதல் 6-ம் தேதி காலை 11.30 மணி வரை எதிர்பார்த்தவை தாமதமாகும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும், சனியின் போக்கும் சரியில்லாததால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும்.  

இல்லம் கலகலப்பாகும்!    

ராசிபலன்கள்

ரிஷபம்: சிந்தனைத்திறனும், செயல்திறனும் கொண்டவர்களே! ராசிக்கு 10-ல் செவ்வாயும், புதனும் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சூரியன் 9-ல் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ராசிக்குள் குரு நிற்ப தால், உங்கள் திறமை மீது உங்களுக்கே அவ்வப்போது சந்தேகம் வரும். பிப்ரவரி 6-ம் தேதி காலை 11.30 மணி முதல் 8-ம் தேதி மதியம் 2.30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும்.

சௌகரியம் அதிகரிக்கும்!

ராசிபலன்கள்

மிதுனம்: எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். சாதுர்யமாக பேசி பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டுவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் 8-ல் நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும்.  பிப்ரவரி 8-ம் தேதி மதியம் 2.30 மணி முதல் 10-ம் தேதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.  

செயல் வேகம்... சூப்பர்!

ராசிபலன்கள்

கடகம்: பிறந்த மண்ணையும், பேசும் மொழியையும் நேசிப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். நல்ல வசதிகள் கொண்ட வீட்டுக்கு மாறுவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். செவ்வாய், சூரியனின் போக்கு சரியில்லாததால்... முன்கோபம், அலைச்சல் வந்து செல்லும். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5 மணி முதல் 12-ம் தேதி வரை வாக்குவாதங்களைத் தவிருங்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலக நேரிடலாம். உத்யோகத்தில் சக ஊழியரின் விடுப்பால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

கொடுத்த கடன் திரும்பும்!

ராசிபலன்கள்

சிம்மம்: நல்லது, கெட்டதை நன்கு அறிந்தவர்களே! சனியும், ராகுவும் 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால், எதிர்ப்புகளை எளிதாகச் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். கடனாக கொடுத்த தொகை கைக்கு வரும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால்... வீண் செலவுகள், உடல் உபாதை, வாகனப் பழுது வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடிக்க நீங்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். குரு 10-ல் இருப்பதால், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி நீங்கள் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

தைரிய லட்சுமி உங்கள் பக்கம்!

ராசிபலன்கள்

கன்னி: கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்களே! செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால், துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மூத்த உறவினரிடம் இருந்து நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். ராசிநாதன் புதன் 6-ம் வீட்டிலும், சூரியன் 5-லும் நிற்பதால், உடல் உபாதை, வீண் டென்ஷன் வந்து செல்லும். பூர்விக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மற்றவர்கள் வியப்பார்கள்.

வருமானம் உயரும்!

ராசிபலன்கள்

துலாம்: சமயோஜித புத்தி அதிகமுள்ளவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வருமானம் உயரும். சுப செலவுகளும் கூடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பூர்விக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். ராசிக்குள் ராகுவும், சனியும் நிற்பதால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பி எளிதில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரருடன் மோதல் ஏற்படலாம். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உதவியால் முன்னேற்றம் அடைவீர்கள்.        

திறமைகள் வெளிப்படும்!

ராசிபலன்கள்

விருச்சிகம்: போராட்டங்கள், ஏமாற்றங்களைக் கண்டு கலங்காதவர்களே! ராசிநாதன் செவ்வாயும், சூரியனும் சாதகமாக இருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வெள்ளியாலான பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். 12-ல் ராகுவும், சனியும் தொடர்வதால், இனம்தெரியாத கவலை, பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

நல்ல செய்தி வரும்!

ராசிபலன்கள்

தனுசு: ஊர் கூடி எதிர்த்தாலும் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே! 3-ல் செவ்வாய் நிற்பதால், மனோபலம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உங்களுக்கு உதவுவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. 2-ல் சூரியன் நிற்பதால், சில நேரங்களில் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். 6-ல் குரு மறைந்திருப்பதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.

எண்ணங்கள் ஈடேறும்!

ராசிபலன்கள்

மகரம்: மற்றவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். புது பதவியும், பொறுப்பும் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ராசிக்குள் சூரியன் இருப்பதால், உடல் நலக் கோளாறு, வேலைச்சுமை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஜனவரி 30-ம் தேதி எதிலும் அவசரத்தை தவிருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சூட்சமங்கள் விளங்கும் நேரம்!      

ராசிபலன்கள்

கும்பம்: பட்டம், பதவி, பணத்துக்கு மயங்காதவர்களே! ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று 9-ம் வீட்டில் தொடர்வதால், சாதனை செய்வதற்கான தன்னம்பிக்கை வரும். வாழ்க்கைத் துணைவர் பொறுப்பாக நடந்து கொள்வார். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால், உணர்ச்சிவசப்படுவீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி, அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தினங்களில் பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அலுவலக சூட்சமங்கள் அத்துப்படியாகும்.    

  எதிரிகள் திருந்துவார்கள்!

ராசிபலன்கள்

மீனம்: நெருக்கடி நேரத்திலும் நிதானம் தவறாதவர்களே! சூரியனும், சுக்கிரனும் லாப வீட்டில் நிற்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உங்களுக்கு எதிராக இருந்த உறவினர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். 8-ல் ராகுவும், சனியும் தொடர்வதால் மனப் போராட்டம் வந்து போகும். பிப்ரவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி காலை 8.30 மணி வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும்.