ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

##~##

வருமானம்... ஓஹோ!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

மேஷம்: சவாலான காரியங்களையும் தன்னம்பிக்கையால் முடிப்பவர்களே! முக்கிய கிரகங்கள் லாப வீட்டிலேயே தொடர்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 2-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவதால், தூக்கமின்மை, சகோதர வகையில் சங்கடம் வந்து செல்லும். மார்ச் 3-ம் தேதி மாலை 4.30 மணி முதல் 5-ம் தேதி மாலை 6 மணி வரை வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும்.  

கொடுத்து சிவக்கும் உங்கள் கரங்கள்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

ரிஷபம்: மற்றவர்களின் மனப்போக்கை எளிதில் புரிந்து கொள்பவர்களே! 6-ல் ராகுவும், சனியும் வலுவாக இருப்பதால், எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டும் முயற்சி பலித மாகும். ஜென்ம குரு தொடர்வதால், நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்கள் உங்க ளுக்கு துரோகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. மார்ச் 5-ம் தேதி மாலை 6 மணி முதல் 7-ம் தேதி வரை வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில், அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும்.

ஆளுமைத்திறன்... சூப்பர்!            

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

மிதுனம்: எந்த சூழ்நிலையிலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். புது வேலை தேடுபவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் பணப்பற்றாக்குறை ஏற்படும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில், உயர் பதவிக்கு உங்களது பெயர் பரிசீலனை செய்யப்படும். உங்கள் திறமையைப் பயன்படுத்தி சிலர் முன்னேறுவார்கள்.    

பிரச்னைகள் குறையும்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

கடகம்: சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கருத்துகளை வெளியிடுவதில் வல்லவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பணவரவு அதிகரிக்கும். மார்ச் 2-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைவதால், பிரச்னைகள் வெகுவாக குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். சூரியன் 8-ல் தொடர்வதால்.. அலைச்சல், உடல் உபாதை வந்து நீங்கும். 10, 11 ஆகிய தேதிகளில் எதிலும் மிகவும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத் தில், நஷ்டங்களை சரிசெய்வீர்கள். உத்யோகத்தில், சக ஊழியர்களால் அலைக்கழிக்கப் பட்டாலும், அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.  

அவசரம்... விவாதம் தவிருங்கள்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

சிம்மம்: தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சாத்விகமான எண்ணங்கள் வரும். பொது அறிவுத் திறனும் கூடும். பணபலம் உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மார்ச் 2-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால், வாழ்க்கைத் துணைவர் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடும். அதை பெரிதாக்க வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். மார்ச் 12-ம் தேதி எந்த விஷயத்திலும் அவசரப்படுவதை தவிருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம்   உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் நீங்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.  

நல்ல சேதி வரும்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

கன்னி: கலை உணர்வும், பணிவான பேச்சும் உள்ளவர்களே! சூரியன் வலுவாக இருப்பதால், எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். சுக்கிரனும், புதனும் 6-ல் மறைந்து கிடப்பதால்... உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், தோழிகளில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

குழப்பம்... தடுமாற்றம் நீங்கும்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

துலாம்: நீதியின் பக்கம் நிற்பவர்களே! 2-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்வதால்... உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பணவரவு திருப்தி தரும். முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும். ராசிக்குள்ளேயே ராகுவும், சனியும் நீடிப்பதால், தன்னம்பிக்கை குறையும். யாருக்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். பிள்ளைகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், அன்பால் மாற்றுங்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.

உத்யோகத்தில் மேன்மை!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

விருச்சிகம்: செய்நன்றி மறவாதவர்களே! கேது வலுவாக 6-ம் வீட்டில் தொடர்வதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். விவாதங்கள், வீண் சண்டைகளை எல்லாம் ஒதுக்குவீர்கள்.. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மார்ச் 2-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 5-ல் நுழைவதால், மனக்குழப்பம், காரிய தாமதம், உடல் உபாதை வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சொத்து பிரச்னையை கவனமாக கையாளப் பாருங்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.    

தைரியலட்சுமி உங்கள் பக்கம்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

தனுசு: தயாள மனசு கொண்டவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியம் கூடும். சில புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கல்யாண நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பூர்விக சொத்து உங்கள் கைக்கு வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய வாகனத்தை விற்று, புதிய வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் குரு 6-ல் நீடிப்பதால்... ஒருவித வெறுமை, கவலைகள் வந்து செல்லும். பல வருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள்கூட உங்களை குறை கூறுவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் திறமைகளை அறிந்து கொள்வார்கள்.

இல்லத்தில் இனிமை பொங்கும்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

மகரம்: விட்டுக் கொடுத்துச் செல்பவர்களே! குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மார்ச் 2-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் வீட்டில் நுழைவதால், சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பு விலகும். 2-ம் வீட்டிலேயே சூரியன் தொடர்வதால், வீண் வாக்குவாதங்கள், மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். வியாபாரத்தில், தாமதமான ஒப்பந்தம் தேடி வரும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.      

அன்புத் தோழிகளின் அரவணைப்பு!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

கும்பம்: தர்மம் தலைகாக்கும் என்பதை அறிந்தவர்களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். நீண்ட நாள் தோழிகளில் சிலர் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால், உடல் உபாதை ஏற்படக்கூடும்.  நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. பிப்ரவரி 27-ம் தேதி காலை 8.30 மணி முதல் மார்ச் 1-ம் தேதி மதியம் 1.30 மணி வரை முன்கோபம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தாமதமாக கிடைக்கும். உத்யோகத்தில் நீங்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

செயலில் வேகம்!

ராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை

மீனம்: புதிய சிந்தனை அதிகம் உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களில் செயலில் வேகம் கூடும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும், மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். மார்ச் 2-ம் தேதி முதல் ராசிக்குள் செவ்வாய் நுழைவதால், சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். மார்ச் 1-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 3-ம் தேதி மாலை 4.30 மணி வரை முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில் தடங்கல் ஏற்படும்.