Published:Updated:

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

‘நவகிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

##~##

திலும் வேகமாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். உங்களது ராசிக்கு 2-ல் குருவும், 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. உங்களின் பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். புத்திசாலித்தனம் பளிச்சிடும்.  குடும்ப நலனுக்காகவும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் செலவு செய்வீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும். விருந்து- உபசாரங்களால் மகிழ்ச்சி பெருகும். வியாபார முன்னேற்றம் குறித்த உங்களது திட்டங்கள் எளிதில் நிறைவேறும். பொருள் கொடுக்கல் - வாங்கல் லாபகரமாக அமையும். முக வசீகரம் கூடும். தர்ம சிந்தனை மேலோங்கும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

9-ஆம் தேதி முதல் புதன் 12-ஆம் இடத்துக்கு  மாறுவதால், செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பிக்கலாம். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

12-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 14-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். உயர் பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடக்கு

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. துர்கையையும் விநாயகரையும் வழிபடவும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

தொழிலில் சாதனை படைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சனியும் ராகுவும், 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன் தரும். அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் பல புரிவர். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களின் நோக்கம் நிறைவேறும்.

9-ஆம் தேதி  முதல் புதன் 11-ஆம் இடம் மாறுவதால் செல்வ வளம் பெருகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆம் இடம் மாறுவதால் சுபச் செலவுகள் ஏற்படும். 12-

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. இடமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவராலும் உடன் பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும்.

14-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆம் இடம் மாறுவதும் குறையே! கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. கூட்டாளிகளிடம் விழிப்புடன் பழகுவதும் அவசியம்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு

எண்கள்:  1, 4, 5, 6, 8, 9

பரிகாரம்:  குருப் பிரீதி செய்யவும். பெரியவர்களை வணங்கி, அவர்களது ஆசி பெறவும். செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபடுவதும் நல்லது.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

மிகச்சிறந்த பேச்சாற்றல் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10, 11-ஆம் இடங்களில் உலவும் கிரகங்கள் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். மனத் துணிவு கூடும். அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்குத் தென்படும். தள்ளிப்போய் வந்த காரியங்கள் நிறைவேறும்.

உயர்பதவி, பட்டங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். தகவல்தொடர்புத் துறையைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசியல்வாதிகளின் மதிப்பு உயரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். எதிரிகள்  அடங்கிப் போவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

9-ஆம் தேதி முதல் புதன் 10-ஆம் இடம் மாறுவதால் வியாபாரம் பெருகும். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும்.

12-ஆம் தேதி முதல் செவ்வாயும், 14-ஆம் தேதி முதல் சூரியனும் 11-ஆம் இடம் மாறுவதால் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். நிலபுலங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிட்டும். முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு

எண்கள்:  1, 6, 9

பரிகாரம்:  விரய ஸ்தானத்தில் உள்ள குருவுக்கும், 5-ல் உள்ள சனி, ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஆஞ்சநேயர், துர்கை வழிபாடும் வளம் சேர்க்கும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

ருணை உள்ளம் நிரம்பக் கொண்டவர் நீங்கள். புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் வலுத்திருப்பதால் உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பெரியவர்கள், தனவந்தர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். பொருளாதார நிலை உயரும்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரம் பெருகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள்.  உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். கலை ஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

4-ல் சனியும் ராகுவும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். வேலைப்பளு கூடும். தாயார் நலனில் கவனம் தேவை. கெட்டவர்களின் தொடர்பு வேண்டாம்.

9-ஆம் தேதி முதல் புதன் 9-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆம் இடம் மாறி, வலுப்பெறுவதால் தொழிலில் விசேஷமான வளர்ச்சியைக் காணலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

14-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆம் இடம் மாறுவதால் உயர்பதவி வாய்க்கும். செல்வ நிலையில் விசேஷமான வளர்ச்சி காணலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கம்பீரமாக நடைபோடுவீர்கள்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 14, 15.

திசைகள்:  தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு

எண்கள்:  1, 3, 5, 6, 9

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் துர்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும். நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

யர்ந்த லட்சியமும் தைரியமான மனமும் பெற்றவர் நீங்கள். 3-ல் சனியும் ராகுவும் உலவுவதால் உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். அதனால் அனுகூலமும் உண்டாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதி- இறக்குமதி இனங்கள் லாபம் தரும். பயணம் சம்பந்தமான காரியங்கள் ஆக்கம் தரும்.

ராசிநாதன் சூரியன் செவ்வாயுடன் கூடி 8-ல் உலவுவதால் உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிறு விபத்துக்கும் ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். 7-ல் புதனும் 9-ல் கேதுவும், 10-ல் குருவும் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் சற்று அதிகரிக்கும். அரசியல், நிர்வாகம், பொறியியல் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல் படுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் புதன் 8-ஆம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆம் இடம் மாறுவதால் புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

12-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆம் இடம் மாறுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்ம காரியங்களில் நாட்டம் அதிகமாகும். 14-ஆம் தேதி முதல்

சூரியன் 9-ஆம் இடம் மாறி வலுப்பெறுவதால் உயர்பதவி, பட்டங்கள் தேடிவரும். தந்தையின்

உடல்நலம் சீராகும். வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் பயன் கிடைக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்:  தென்கிழக்கு, மேற்கு

எண்கள்: 6, 8

பரிகாரம்: சூரியன், செவ்வாய், கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணமும் முருகப்பெருமான், விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வதும் நல்லது.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

 சீகரச் சக்தி கொண்டவர் நீங்கள். ராசிநாதன் புதன் ஆறிலும், குரு ஒன்பதிலும் உலவுவது விசேஷமாகும். உங்கள் ஜன்ம ராசியையும், 3, 5-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகவே இருந்துவரும். மன மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோரால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பண நடமாட்டம் திருப்தி தரும். ஸ்பெகுலேஷன்  துறைகள் லாபம் தரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

2-ல் சனியும் ராகுவும் இருப்பதாலும், 7-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உலவுவதாலும், 8-ல் கேது சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருக்கும் உங்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகமாகும். சகிப்புத் தன்மை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது அவசியம். 9-ஆம் தேதி முதல் புதன் 7-ஆம் இடம் மாறுவது சிறப்பு ஆகாது. வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆம் இடம் மாறுவதால் கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆம் இடம் மாறுவதால் எந்தக் காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.  

14-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆம் இடம் மாறுவதால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. வெடிபொருள், எரிபொருள், மின்சாரம், இயந்திரம், வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போதும், அவற்றின் அருகில் நெருங்கும்போதும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்:  வடகிழக்கு, வடக்கு

எண்கள்: 3, 5

பரிகாரம்: சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

நீதி, நேர்மை தவறாதவர் நீங்கள். சூரியனும் செவ்வாயும் 6-ஆம் இடத்தில் உலவுவது விசேஷமாகும். எதிரிகள் அடங்குவர். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். அரசாங்கத்தார் மூலம் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல புரிவர். இயந்திரப் பணிகள் லாபம் தரும். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். எரிபொருள், வெடிபொருள், மின்சாரம், வீடு கட்டுமானப் பொருள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

ஜன்ம ராசியில் சனியும் ராகுவும் இருப்பதால் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். 6-ல் சுக்கிரனும் 7-ல் கேதுவும் உலவுவதால் வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. கூட்டாளிகளால் பிரச்னைகள் ஏற்படும். குரு 8-ல் இருப்பதால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் இருந்துவரும். மக்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். பொருள் கொடுக்கல்- வாங்கலில் விழிப்பு உணர்வு தேவை. 9-ஆம் தேதி முதல் புதன் 6-ஆம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆம் இடம் மாறுவதும், 12-ஆம் தேதி முதல் செவ்வாயும், 14-ஆம் தேதி முதல் சூரியனும் 7-ஆம் இடம் மாறுவதும் குறையே! கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துப் பழகிவருவது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும். பிறரிடம் கோபம் வேண்டாம். நூதன முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 15 (இரவு)

திசைகள்: கிழக்கு, தெற்கு

எண்கள்: 1, 9

பரிகாரம்:  குரு, சுக்கிரன், ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தினமும் காலை வேளையில் சில நிமிடங்கள் தியானம், யோகா செய்வதும் அவசியம்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

வருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள். குரு 7-ல் அமர்ந்து, உங்கள் ஜன்ம ராசியையும் 3, 11-ஆம் இடங்களையும் பார்ப்பது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பண நடமாட்டம் கூடும். முயற்சி வீண்போகாது. உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மக்கள் நலம் சீராகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.

4-ல் புதன் இருப்பதால் வியாபாரம் பெருகும். 5-ல் சுக்கிரன் இருப்பதால் கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். ஜலப்பொருட்கள் லாபம் தரும். மன உற்சாகம் கூடும். 9-ஆம் தேதி முதல் புதன் 5-ஆம் இடம் மாறுவது சிறப்பாகாது. 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆம் இடம் மாறுவதும் குறையே! வியாபாரிகளும் கலைஞர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 12-ஆம் தேதி முதல் செவ்வாயும் 14-ஆம் தேதி முதல் சூரியனும் 6-ஆம் இடம் மாறுவதால் செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள்.

வேலை இல்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். இயந்திரப் பணியாளர்களும் என்ஜினீயர்களும் வளர்ச்சி காண்பார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசு உதவி கிட்டும். சனியும் ராகுவும் 12-ல் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணத்தின்போது விழிப்பு தேவை.

அதிர்ஷ்டத் தேதிகள்:ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு

எண்கள்:  1, 3, 5, 6, 7.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமை துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். சனிக்கிழமைகளில் ஹனுமன் சாலீஸா படிக்கவும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

தூய உள்ளமும் தெய்வ பக்தியும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது விசேஷமாகும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் ஈடுபடுவீர்கள். மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நிலபுலங்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது. அந்நிய நாட்டவர்களால் அனுகூலம் உண்டாகும். போக்குவரத்து இனங்கள், ஏற்றுமதி- இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள், கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள், விளைபொருட்கள் மூலம் ஆதாயம் கிடைத்துவரும். புதன் 3-ல் இருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை.

சூரியனும் செவ்வாயும் 4-ல் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். 5-ல் கேதுவும் 6-ல் குருவும் இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். 9-ஆம் தேதி முதல் புதன் 4-ஆம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்தநிலை விலகும். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும்.

12-ஆம் தேதி முதல் செவ்வாயும், 14-ஆம் தேதி  முதல் சூரியனும் 5-ஆம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும், செவ்வாய் தன் சொந்த ராசியிலும், சூரியன் தன் உச்ச ராசியிலும் உலவும் நிலை அமைவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளாலும் தந்தையாலும் நலம் உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு

எண்கள்:  4, 6, 8

பரிகாரம்:  விநாயகருக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்வதும், குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வதும் நல்லது. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி, அவர்களது வாழ்த்துகளைப் பெறவும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

ந்தக் காரியத்திலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுபவர் நீங்கள். சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். அரசு உதவி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். என்ஜினீயர்களது எண்ணம் ஈடேறும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை தொடரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிட்டும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்தரும்.

9-ஆம் தேதி முதல் புதன் 3-ஆம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆம் இடம் மாறுவதால் சுகம் கூடும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். 12-ஆம் தேதி முதல் செவ்வாயும், 14-ஆம் தேதி முதல் சூரியனும் 4-ஆம் இடம் மாறுவதால் உடல்நலம் பாதிக்கப்படலாம். உஷ்ணாதிக்கம் கூடும். சொத்துகள் சேரும். என்றாலும், சட்டப்படி சரியாக உள்ளதா என்று சரிப்பார்த்து வாங்கவும். தாய் நலனில் கவனம் தேவை. அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, தெற்கு, தென்மேற்கு. கிழக்கு.

எண்கள்:  3, 4, 5, 6, 8, 9

பரிகாரம்:  அருகம்புல் அர்ப்பணித்து விநாயகரை வழிபடவும். தினமும் வீட்டில் விளக்கேற்றியதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வருவது, வெற்றிகள் தொடர உதவும்.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

லை ஆர்வம் அதிகம் பெற்றவர் நீங்கள். கோசாரப்படி சுக்கிரனும் கேதுவும் மட்டுமே அனுகூலமாக உலவுகிறார்கள்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால், எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். பெற்றோர் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய நேரும்.

வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. கலைத்துறையினருக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 9-ஆம் தேதி முதல் புதன் 2-ஆம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆம் இடம் மாறுவதால் உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். அவர்களின் ஒத்துழைப்பில் சில காரியங்களை சாதிப்பீர்கள்.

12-ஆம் தேதி முதல் செவ்வாயும், 14-ஆம் தேதி முதல் சூரியனும் 3-ஆம் இடம் மாறுவதால் மனத் துணிவு கூடும். எதிர்ப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். பிரச்னைகள் குறையத் தொடங்கும். மந்த நிலை விலகி, சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஏப்ரல் 7, 14, 15

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு

எண்கள்:  6, 7

பரிகாரம்:  நவக்கிரக ஜப, ஹோமம் செய்யலாம். அல்லது ஹோமம் நடக்கும் இடங்களுக்குச் சென்று அதில் கலந்து கொள்ளலாம். கோளறு திருப்பதிகம் வாசிப்பதும் நல்லது.

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை

சாஸ்திர, சம்பிரதாயங்களை மதித்துப் போற்றுபவர் நீங்கள். கோசாரப்படி சுக்கிரன் ஒருவரே சாதகமாக உலவுகிறார். இதர கிரக நிலை சிறப்பாக இல்லை. கலைஞர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

பெண்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட நேரலாம். கவனம் தேவை. கடுமையாக உழைத்தே பயன் பெற வேண்டிவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் தவிர்க்கவும். பயணத்தின்போது விழிப்பு தேவை. எந்தக் காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். சிக்கன நடவடிக்கை தேவை. 9-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. 10-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆம் இடம் மாறுவது சிறப்பாகும். 12-ஆம் தேதி முதல் செவ்வாயும், 14-ஆம் தேதி முதல் சூரியனும் 2-ஆம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது. என்றாலும், செவ்வாய் தன் சொந்த ராசியிலும், சூரியன் தன் உச்ச ராசியிலும் உலவும் நிலை அமைவதால் பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். கடனாகவும் பணம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும். வீண் வம்புகளில் ஈடுபட வேண்டாம். கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டத் தேதிகள்:ஏப்ரல் 14, 15

திசை: தென்கிழக்கு

எண்: 6

பரிகாரம்:  நவக்கிரக வழிபாடு நலம் தரும். வேதம் படித்தவர்களுக்கும், ஏழை- எளியவர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவும். 

ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை
ராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை