##~## |
வாழையும் கண் திருஷ்டியும்...
நாம் புதிதாக கட்டியுள்ள வீட்டின் மீது கண் திருஷ்டி விழுவதைத் தடுக்கும் சக்தி வாழை மரங்களுக்கு உண்டு. அந்த மரங்களை வீட்டின் முகப்புப் பகுதியில் வளர்த்தால் கண் திருஷ்டியின் பாதிப்பைத் தடுத்துவிடலாம். வாழை மரங்கள் ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். அதனால், நம் வீட்டின் மீது எந்த மாதிரியான திருஷ்டி இருந்தாலும் அது உடனடியாகவே காணாமல் போய்விடும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொதுவாகவே, இயற்கைத் தாவரங்கள், செடி கொடிகளை வீட்டின் முகப்பில் வளர்த்தாலும், கண் திருஷ்டி கழியும்!


இழந்ததைப் பெற்ற அரிச்சந்திரன்!
பொய் என்கிற வார்த்தையைக்கூடக் கனவிலும் நினைக்காதவன் அரிச்சந்திரன். உண்மை என்பதற்கு முழுமையான உதாரணமாக நம்மால் போற்றப்படும் ஒரே உதாரண புருஷன் அவன்தான். முன்வினைப்பயனால் நாட்டை இழந்து, மனைவி, குழந்தையை விற்று, ஒருவனிடம் தானே அடிமையாக இருந்து, சுடுகாட்டைக் காவல் காக்க வேண்டிய துர்பாக்கிய நிலை அவனுக்கு நேர்ந்தது. அப்போது, கௌதம முனிவர் சொன்னபடி மகாவிஷ்ணுவை நோக்கி 'அஜா ஏகாதசி விரதம்’ மேற்கொண்ட அரிச்சந்திரன், இழந்தவை அனைத்தையும் திரும்பப்பெற்றான். புரட்டாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி. நாமும் இவ்விரதம் மேற்கொண்டால், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்; இழந்த செல்வங்களை மறுபடியும் பெறலாம்.
- குபேர ஆனந்த்