சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிட்ஸ்!

பிட்ஸ்!

##~##
பிட்ஸ்!

உங்கள் வாக்கு பலிக்குமா?

வாக்குக்குக் காரகன் புதன் ஆவார். புதன் ஆட்சி உச்சமாக வலுத்திருந்தால் வாக்கு சித்தி உண்டாகும். வாக் தேவி சரஸ்வதி ஆவாள்.  புதனையும் சரஸ்வதியையும் வணங்குவதன் மூலம் நல்ல பேச்சு அமையும். வாக்கு சித்தியும் உண்டாகும்.

தேபோன்று, ஜாதகர் ஒருவருக்கு குரு மற்றும் சுக்ர பலத்தால், எவ்வித எதிர்ப்பாக இருந்தாலும் சமாதான முறையில் பேசிச் சமாளிக்கும் திறன் வாய்க்கும்!
 

பிட்ஸ்!

கிரக நிலைகளும் நீங்களும்!

குரு ஆட்சி, உச்சம் பெற்று 2ஆம் இடத்தில் இருந்தாலோ, 2ஆம் இடத்தைப் பார்த்தாலோ, இனிப்பு சாப்பிடுவதில் உங்களுக்கு அதீத ஆர்வம் இருக்கும்.

க்னத்தில் ராகு அமர்ந்து, தொழில் ஸ்தானாதிபதி 11-ல் சர ராசியில் இருந்தால் சுற்றுப்பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

மேஷம், சிம்மம், தனுசு ராசிகளில் பிறந்து, லக்னாதிபதி வலுப்பெற்றவர்கள், சிறந்த போர் வீரர்களாகத் திகழ்வார்கள். எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.

பிட்ஸ்!

கருட தரிசனம்!

விண்ணில் கருடன் பறப்பதைத் தரிசிப்பது விசேஷம். ஞாயிறு அன்று கருடனைத் தரிசித்தால் பிணி அகலும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தரிசிக்க, துன்பங்கள் நீங்கும். புதன், வியாழக் கிழமைகளில் தரிசிக்க, தீவினைகள் நீங்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் தரிசித்தால், ஆயுள் பெருகும், செல்வம் சேரும்.

கருடனைத் தரிசிக்கும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்வது நல்லது.

குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவா ஹ நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம