சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உங்கள் லக்னம் லக்கியா?

லக்கி லக்னம் மேஷம்

##~##

நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவரா? எனில், தெய்வீக ஞானத்துடன் வல்லமை மிகுந்தவராகவும் திகழ்வீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல், பாலகங்காதர திலகர் ஆகியோர் பிறந்ததும் இந்த லக்னத்தில்தான்.

* செவ்வாயின் திருவருளால் தீர்க்காயுள் யோகம் உண்டு. தனவந்தர் ஆகும் நிலையும், திடீர் யோகமும் வந்து சேரும்.

* புத்தி சாதுரியத்துடன் பேசும் வல்லமை பெற்றிருப்பீர்கள்.

* மகாலட்சுமியின் அருட்கடாட்சம் உங்களிடம் நிறைந்திருக்கும். தைரியசாலிகளான நீங்கள் எதிரிகளை எளிதில் வெல்லும் சூட்சுமத்தை அறிந்து வைத்திருப்பீர்கள்.

* வாழ்வின் நெளிவு சுளிவுகளைத் துல்லியமாக அறிந்தவர் நீங்கள். மற்றவருக்கு எடுத்துக்காட்டாக, உதாரண புருஷராகத் திகழும் அமைப்பு உங்களுக்கு உண்டு.

* மற்றவர்களின் மனத்தைப் புரிந்து பேசும் பண்பாளரான நீங்கள், உறவுகளால் பெரிதும் விரும்பப்படுகிறவர்களாக இருப்பீர்கள்.

* புராண- இதிகாசங்கள், சாஸ்திரக் கோட்பாடுகளிலும் பாரம்பரிய விஷயங்களிலும் நாட்டம் கொண்டிருப்பீர்கள். மேடைப்பேச்சு, விவாதங்களில் வெற்றி உங்களுக்கே!

* எவருக்கும் அடிபணிய மாட்டீர்கள். அன்புக்கு  மட்டுமே தலை வணங்குபவர் நீங்கள்.

* போஜனப் பிரியர்கள். பிறருக்கு உதவும் உத்தம குணம் கொண்டவர். அவ்வப்போது முன்கோபமும் வந்துபோகும். உண்மை, நேர்மை, நீதியுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றியைச் சுவைப்பீர்கள்.

உங்கள் லக்னம் லக்கியா?

லக்னாதிபதி: செவ்வாய்

தெய்வம்: ஸ்ரீமகாலட்சுமி

தேவதை: ஸ்ரீதுர்கை

வஸ்திரம்: சிவப்பு வண்ண ஆடைகள்

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27. மேலும் 6, 15, 24 ஆகிய எண்களும் நலம் பயக்கும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: பவழம்

வழிபாடு: தினமும் வீட்டில் மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து, கந்த சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள்; நடப்பதெல்லாம் நன்மையாகவே முடியும்.

குறிப்பு: பொதுவாக, சூரியன் ஒருநாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 ராசிகளுக்கு மாறுவார். ஒரு ராசியில் 2 மணி நேரம் இருப்பார். நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அதுவே, உங்களின் ஜன்ம லக்னம். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'ல’ என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை அறியலாம்.

- 'ஜோதிட மணி’ வசந்தா சுரேஷ்குமார்