சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

‘நவகிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

##~##

சாதிக்கும் குணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குரு உலவுவது சிறப்பு. சூரியனும் செவ்வாயும் ஜன்ம ராசியில் இருப்பது சிறப்பாகாது. எனினும், சூரியன் தனது உச்ச ராசியிலும், செவ்வாய் தனது சொந்த வீட்டிலும் இருப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.

உடல்நலம் சீராகும். செயலில் வேகம் பிறக்கும். எடுத்த காரியங்களை இனிதே செய்து முடிப்பீர்கள். காடு, மலைகளில் சுற்றித் திரிய ஆசைப்படுவீர்கள். பண நடமாட்டம் அதிகமாகும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். புதிய பொருள் சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கலைஞர்கள் அளவோடு நலம் பெறுவார்கள். புதிய வாய்ப்புகளுக்கான முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

7-ல் சனியும் ராகுவும் இருப்பதால் பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத் துணைவராலும், பங்குதாரர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது. கெட்ட நண்பர்களை விட்டு விலகவும். 28-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது.  

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 24, 25, 29 (பிற்பகல்).

திசைகள்:  வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு.

எண்கள்: 1, 3, 6, 9.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்யுங்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நல்லது.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

சீகரமான தோற்றம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, ராகு ஆகியோரும், 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள்.  இதனால், எடுத்த காரியத்தில் எப்பாடு பட்டாவது வெற்றி பெற்று விடுவீர்கள். புதியவர்களது தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்.

கலைத் துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், கேது ஆகியோர் இருப்பதால், வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

தேவையில்லாமல் எந்தச் செலவையும் செய்ய வேண்டாம். சிக்கனமாக

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

இருக்கப் பாருங்கள். கண், கால், பாதம் சம்பந்தமான உபத்திரவங்கள் உண்டாகும். தந்தையாலும், உடன் பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும்.

28-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்தினால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் ஓரளவாவது முன்னேற முடியும். கெட்டவர் களின் சகவாசம் கூடாது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 24, 25.

திசைகள்:  தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, மேற்கு.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படியுங்கள். முருகப்பெருமானை வழிபடுங்கள்.

மென்மையான தன்மை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் புதனும், 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பிரகாசிக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களை

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

செவ்வனே செய்து முடிப்பீர்கள். பலராலும் பாராட்டப்படுவீர்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். கலைத் துறை ஊக்கம் தரும். வித்தியாசமான படைப்புகளை வெளியிட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். லாப ஸ்தானம் வலுத்திருப்பதால் பல வழிகளில் பணம் வந்து பையை நிரப்பும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். உயர் பதவி, பட்டங்கள் தேடி வரும். 5-ல் சனியும் ராகுவும், 12-ல் குருவும் உலவுவதால் மக்களால் சில பிரச்னைகள் சூழும்.  எந்தவொரு பிரச்னையிலும் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

28-ஆம் தேதி முதல் புதன் 11-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கும். மாணவர்களது திறமை பளிச்சிடும். நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வருவர். புதிய சொத்துகள் சேரும். சிலர் சொந்த வீட்டுக்கு குடியேறும் வாய்ப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 24, 25, 29.

திசைகள்:  தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

பரிகாரம்: குருப் பிரீதி செய்யவும். சனிக்கும் ராகுவுக்கும் பிரீதியாக ஆஞ்சநேயரையும் துர்கையையும் வழிபடவும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

ஞாபக சக்தி அதிகம் பெற்ற கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 10-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், கேது ஆகியோரும், 11-ல் குருவும் உலவுவது விசேஷமாகும். முக்கியமான காரியங்கள் அனைத்தும் இப்போது எந்த தடைகளும் இல்லாமல் எளிதில் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.

சமூகத்தில் உங்களின் செல்வாக்கும், மதிப்பும், அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். அரசியல்வாதிகளுக்கு, மக்கள் மத்தியிலும் கட்சி மேலிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும்.

நிறுவன, நிர்வாகத் துறையைச் சார்ந்தோருக்கு முன்னேற்றமான போக்கு தென்படும். இயந்திரப் பணியாளர்களும் இன்ஜினீயர்களும் வளர்ச்சி காண்பர். நிலபுலன்களால் அளவோடு லாபம் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும்.

4-ல் சனியும் ராகுவும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும்.  அதனால் உடல் சோர்வு ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 28-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு இருந்துவந்த மந்தநிலை விலகும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும்.  

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 24, 25, 29.

திசைகள்:  கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு.

எண்கள்: 1, 3, 6, 7, 9.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் காளி அல்லது துர்கைக்கு நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யவும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

வைராக்கியம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

3-ல் சனியும் ராகுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவதால் உங்கள் திறமை வெளிப்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். அவ்வப்போது சிறு பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதனால் உங்களுக்கு அனுகூலமும் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும்.

செவ்வாய் பகவான் தனது சொந்த வீடான மேஷத்திலும், ராசிநாதன் சூரியன் தனது உச்ச வீட்டில் செவ்வாயுடன் சேர்ந்தும் இருப்பதால், தான- தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சந்தர்ப்பம் கூடி வரும். தொலைதூரத் தொடர்புகள் பயன்படும்.

உங்கள் தந்தைக்கு இதுவரையிலும் இருந்து வந்த சங்கடங்கள் யாவும் விலகும். அரசாங்க விவகாரங்களில் உங்களுக்கு அனுகூலமான திருப்பம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். காடு, மலைகளில் சுற்றித் திரிய வாய்ப்பு உண்டாகும். இந்த ராசியைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரப் பெறுவார்கள்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பணியில் பொறுப்புடனும் கவனமுடனும் செயல்படுவது நல்லது.

28-ஆம் தேதி முதல் புதன் 9-ஆம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது.

கன்னிப்பெண்களுக்கு மனம் இனிக்கும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். சுப காரிய முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 24, 25, 29.

திசைகள்:  தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.

பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடவும். வியாழக்கிழமைகளில் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் பசு நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

பிறரிடம் சகஜமாகப் பேசிப் பழகும் கன்னி ராசி அன்பர்களே!

குருவும் சுக்கிரனும் சாதகமாக உலவுவதால் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோரால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து வரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் ஆகிய இனங்கள் லாபம் தரும். தெய்வப் பணிகள் இனிதே நிறைவேறும். சாதுக்கள், மகான்கள், சித்தர்கள் ஆகியோரது தரிசனம் கிடைக்கும். கலைஞர்கள் அளவோடு வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களின் நிலை உயரும். இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

2-ல் சனி, ராகு ஆகியோரும், 8-ல் சூரியன், செவ்வாய், கேது ஆகியோரும் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். கனிவுடன் பேசி காரியம் சாதிக்க வேண்டிய காலம் இது. எனவே, பேச்சில் நிதானம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். இல்லையெனில் வீண் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு  விபத்துக்கு ஆளாக நேரலாம். எதிலும் பதற்றம் வேண்டாம். நிதானம் அவசியம் தேவை. சகோதர நலனில் அக்கறை  செலுத்த வேண்டிவரும். 28-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 24, 25, 29.

திசைகள்:  வடகிழக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 3, 6.

பரிகாரம்:  அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவக்கிரகங்களை வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

ற்குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

கோசாரப்படி முக்கியமான கிரகங்கள் அனுகூலமாக உலவாத காரணத்தால் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கவே செய்யும். அவற்றை பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபட்டால் பயன் பெறமுடியும். அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்பதால் பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுங்கள். இதன் மூலம் அவர்களால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

வெளியூர் பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டுக்கொடுத்துப் பழகிவருவதன் மூலம் பிரிவினைக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருளாதார நிலை சீராக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் திடீர் திடீரென்று வந்துபோகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

புதிய துறைகளில் பிரவேசிக்க இந்த நேரம் சிறப்பானதாக இல்லை. அதனால், அவசரப்பட்டு புதிய துறையில் கால்பதிக்க வேண்டாம். அதேபோல், வழக்கமாகச் செய்துவரும் காரியங்களில்கூட அதிக அக்கறை  தேவை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்திகள் நடக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலம் இல்லாதவர்கள் இறைவழிபாட்டில் முழு நம்பிக்கையோடு ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.  

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 25, 29.

திசை:  வடக்கு.

எண்: 5.

பரிகாரம்:  நவக்கிரக வழிபாடு அவசியம். தினமும் காலை வேளையில் சில நிமிடங்கள் தியானம், யோகா செய்வதும் நல்லது. அதோடு, குடும்பப் பெரியவர்களை மதித்து, அவர்களது ஆசியைப் பெறுங்கள்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

விடாமுயற்சியால் சாதனை புரியும் விருச்சிக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் குரு இருப்பதாலும், சூரியன், செவ்வாய், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். நல்லவர்களும் வல்லவர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் கைகூடும்.

நிர்வாகத் திறமையால் ஓரிரு சாதனைகள் புரிவீர்கள். எதிரிகளின் கரம் வலுவிழக்கும். வழக்கில் வெற்றி கிட்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைக்கும். மருத்துவர்களுக்கு 'கைராசிக்காரர்’ என்ற பெயர் கிடைக்கும். அரசுப் பதவியைப் பெற வாய்ப்பு உண்டாகும். அரசாங்கத்தாரால் கௌரவிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்களும் சட்டென்று நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். இயந்திரப் பணியாளர்களும் இன்ஜி னீயர்களும் வளர்ச்சி காண்பார்கள். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும்.

6-ல் சுக்கிரனும், 12-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவதால் வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண், கால், பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பயணம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். 28-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எதிர்பார்க்கும் லாபமும் கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்:ஏப்ரல் 22, 24, 29.

திசைகள்:  கிழக்கு, தெற்கு, வடமேற்கு, வடகிழக்கு.

எண்கள்: 1, 3, 7, 9.

பரிகாரம்:  துர்கைக்கும் ஆஞ்சநேயருக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. சுமங்கலி பூஜை செய்வதும் நல்ல பலன் தரும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

தீயவைகளை எதிர்த்துப் போராடும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் 5-ல் இருந்தாலும்கூட செவ்வாய் ஆட்சி வீட்டிலும், சூரியன் தன் உச்ச வீட்டிலும் இருப்பதால் நலம் புரிவார்கள்.

நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். மனத்தில் துணிவு பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவிபுரிவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும்.

உயர் பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். அரசியல் ஈடுபாடு பயன்படும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். இன்ஜினீயர்களது நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் கிடைத்து வரும்.

5-ல் கேதுவும் 6-ல் குருவும் இருப்பதால் மக்களால் சங்கடம் உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயத்தைப் பெற இயலாது. ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் காரியம் ஆற்றுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 24, 25, 29 (பிற்பகல்).

திசைகள்:  தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.

பரிகாரம்: குருவுக்கும் கேதுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். மேலும், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும் வழிபடுவது மனச்சாந்தியை அளிக்கும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

காரியத்திலேயே கண்ணாக இருந்து சாதிக்கும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 5-ல் குருவும், 10-ல் சனியும் ராகுவும்

சஞ்சரிப்பது சிறப்பாகும். இதனால் சுகானுபவம் உண்டாகும். மன மகிழ்ச்சி கூடும். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். புதிய ஆடை- அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் பெருகும். புதியவர்களது தொடர்பால் நலம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் தேடி வந்து உதவி செய்வார்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும்.

3-ல் புதன் இருப்பதால், வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். சூரியனும், செவ்வாயும், கேதுவும் 4-ல் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். உடல் சோர்வு ஏற்படும். தாயின் உடல்நலம் பாதிக்கப்படலாம். முக்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ இழக்க நேரலாம்.

சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கை தேவை. 28-ஆம் தேதி முதல் புதன் 4-ஆம் இடம் மாறுவது சிறப்பாகும். புதிய பொருட்கள் சேரும். மாணவர்களது மந்தநிலை விலகும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 24, 25.

திசைகள்:  வடகிழக்கு, தென்மேற்கு. மேற்கு, தென்மேற்கு.

எண்கள்: 3, 4, 6, 8.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நல்லது.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

திக கற்பனை ஆற்றல் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். மிகச்சிறந்த நிர்வாக ஆற்றல் இப்போது வெளிப்படும். எதிரிகளை வென்று, வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களின் மரியாதை கூடும்.

இயந்திரப் பணிகள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் முன்னேற்றமான பாதை தெரியவரும். போட்டிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டில் ஈடுபாடு கூடும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். ஆன்மிகவாதிகள் புகழ் பெறுவார்கள்.

மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். அலைச்சல் வீண்போகாது. பெற்றோராலும் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். 28-ஆம் தேதி முதல் புதன் 3-ஆம் இடம் மாறுவதால் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். சகோதர நலனில் கவனம் தேவைப்படும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் கொடுப்பதில் கவனம் தேவை. சமீப நாட்களில் அறிமுகம் ஆனவர்களுடன் கூடுதல் விழிப்புடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 22, 25, 29.

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குருமூர்த்தியை வழிபடவும். குதூகலமான வாழ்க்கை தேடி வரும். மனத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை

புத்திக்கூர்மையுள்ள மீன ராசி அன்பர்களே!

கோசாரப்படி சுக்கிரன் ஒருவரே சாதகமாக உலவுகிறார். அவரும் பாவக்கிரகங்களோடு சேர்ந்து, சனியால் பார்க்கப்பட்டும் இருக்கிறார். செவ்வாய் 2-ல் இருந்தாலும், தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேஷமான நன்மைகளை இப்போது எதிர்பார்க்க இயலாது.

குடும்பத்தில் சண்டை- சச்சரவுகளும், குழப்பமும் ஏற்படும். செலவுகளைச் சமாளிக்கக் கடன்வாங்க வேண்டிவரும். பணம் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். உழைப்பு அதிகரிக்கும். அந்த அளவுக்கு வருமானம் கிடைக்காமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வாய், முகம், பல், கண் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. வீண் வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம்.

இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிபொருட்கள் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். 28-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதால் நிலபுலன்கள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்:  ஏப்ரல் 22, 24, 29.

திசை:  தென்கிழக்கு, தெற்கு.

எண்கள்: 6, 9.

பரிகாரம்:  நவக்கிரகங்களைத் தேடிச் சென்று வழிபடுவது நல்லது. அதோடு, நவக்கிரக ஹோமமும் செய்யவும். அல்லது, ஹோமம் நடக்கும் இடம் சென்று கலந்து கொள்ளவும்.

ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை
ராசிபலன் - ஏப்ரல் 16 முதல் 29 வரை