குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3
##~##

ந்த கர்ம பூமியில் பிறந்த அனைவரும் ஒருவரோடு ஒருவர் நட்புடன் பழகி, நல்லனவற்றைச் செய்து அல்லனவற்றை விலக்கிட வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். ஆனால், போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில் கூட்டுத் தொழில், சொத்து முதலான பல விஷயங்களை முன்னிட்டு, நண்பர்களும் பகைவர்களாகும் நிலையே அதிகம்.

உங்கள் ஜாதகத்தில் 6-ஆம் இடம் வலுவிழந்து இருந்தால், சத்ரு பயம் அதிகரிக்கும்; வாழ்வில் எதிரிகள் தொல்லை அதிகமாகும். ஒருவரது ஜனன ஜாதகத்தில் 6-ஆம் இடமே வழக்கு, எதிரித் தொல்லை, வீண் வாதங்கள் ஆகியவற்றை எடுத்துச் சொல்கிறது. ஆறாம் இடத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஆறுமுகனே சரியான கடவுள்.

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3

வெள்ளிக்கிழமை அன்று காலையில் பூஜையறையை சுத்தப்படுத்தி, பூஜைக்குத் தயாராக வேண்டும். தட்டு ஒன்றில் விபூதியைப் பரப்பி, அதில் வட்டம் வரைந்து, அதன் மையத்தில் சேவற்கொடியையும் வேலாயுதத்தையும் ( போன்று) வரைய வேண்டும். பிறகு மேலிருந்து கீழாக... ண ப வ ச ர ஹ என்று எழுதிக்கொள்ளுங்கள்.  இதை ஸ்ரீபாலமுருகனின் திருப்படத்தின் முன் வைத்து வணங்க வேண்டும். முருகப்பெருமானுக்கு சந்தன- குங்கும திலகம் இட்டு, தேங்காய்- பழம், தாம்பூலம் சமர்ப்பித்து, வெண் மலர்களைச் சாற்றி, விளக்குகள் ஏற்றிவைக்க வேண்டும். நிவேதனமாக அவல் பாயசம் படைப்பது விசேஷம்.

முதலில், 'ஓம் கம் கணபதயே நம:’ என்று 11 தடவை சொல்லி கணபதியை வழிபட வேண்டும். பிறகு, அன்றைய நாள் விபரம் கூற வேண்டும். தொடர்ந்து,  'ஓம் ஸ்ரீம்-க்லீம்-ஹ்ரீம்-ஐம்-சௌம்-நம: ஓம் சௌம் சரவணபவ’ என்று 108 தடவை கூறி, சங்குபுஷ்பம், முல்லை மலர்களால் அர்ச்சித்து, தீபாராதனை காட்டி, முருகனை வழிபட வேண்டும். நிறைவாக...

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல் வாரி
குளித்த வேல் கொற்ற வேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

- எனும் துதிப்பாடல் பாடி, பூஜையை நிறைவு செய்யலாம். பிரசாதத்தை, 6 வயதுக்குட்பட்ட பாலகன் ஒருவனுக்கு முதலில் தந்து, பிறகு மற்றவர்களுக்கு வழங்கலாம்.

தொடர்ந்து இந்த பூஜையை செய்துவர, பகை ஒழியும்; எதிரிகளும் நம் அன்புக்கு அடிமையாவார்கள்; நட்பு பெருகும்.

- வழிபடுவோம்...