குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பிட்ஸ்!

பிட்ஸ்!

##~##

கஜகேசரி யோகம்!

சந்திரன் - மனம். குரு- அறிவு. சந்திரனோடு குரு இணையும்போது, அதாவது மனத்துடன் அறிவு இணைந்தால் செயல் சிறக்கும். அதன் விளைவால் செல்வத்தில் திளைக்கும் யோகம் வரும். இதை கஜகேசரி யோகம் எனச் சிறப்பிக்கிறது ஜோதிடம்.

பிட்ஸ்!

இல்லறத்தை இனிமையாக்கும் குரு!

7ல் இருக்கும் செவ்வாயை குரு லக்னத்தில் இருந்து பார்க்கும்போது, இடையூறுகள் நீங்கும். இத்தகைய அமைப்புள்ள ஜாதகக்காரர்களுக்கு தாம்பத்தியத்தில் இன்னல்கள் ஏதும் நேராது.

சினிமா வாய்ப்பு அமையுமா?

துலாத்தில் குரு அமையப்பெற்ற ஜாதகக்காரர்கள் மதிநுட்பம் மிகுந்தவர்களாகத் திகழ்வர். சுபிட்சமான வாழ்வு, கல்வி- கேள்விகளில் மேன்மை, குறையற்ற குழந்தைச் செல்வம், இணை பிரியாத நட்பு ஆகிய அனைத்தும் கிடைக்கும். இத்தகைய அமைப்புள்ளவர்கள், சினிமாத் துறையிலும் கோலோச்சுவர்.