குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

உங்கள் லக்னம் லக்கியா?

உங்கள் லக்னம் லக்கியா?

உங்கள் லக்னம் லக்கியா?
##~##

அன்பு, கனிவான பேச்சு, சத்திய வாக்கு கொண்ட சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் அபார திறமையும் கொண்டவர்கள்.

* தெய்வ சிந்தனை அதிகம் உண்டு. பிறரின் மனத்தைப் புரிந்து செயல்படுவீர்கள். ஸ்தூல தேகம் அமையப்பெற்றவர். குணதோஷம் அறிபவர். முக வசீகரம், கம்பீரத் தோற்றம், வேடிக்கையாகப் பேசும் திறமை கொண்டவர்.

* கலை, இலக்கியம், சினிமாத் துறையில் பிரகாசிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். அம்பாளின் அருள்பெற்ற பாக்கியசாலிகள் நீங்கள். ஆடை-ஆபரணம், செல்வம், சொத்து-சுகம் தேடி வரும்.

* பிறரது சொத்துக்களை கிரகிப்பதில் வல்லவர். எதையும் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் விஷயஞானிகள். நீண்ட ஆயுள் அமையும்.

* அயல்நாடு செல்லும் பாக்கியமும், அழகான வீடும் கிட்டும். பிற்காலத்தில் ராஜயோகம் உண்டு. புத்திரர்களால் நன்மை அடை வீர்கள். உங்களுக்கு சூரியனும் சனியும் சுபர்கள். சனி பகவான் ராஜ யோகம் தருவார். சந்திரன், குரு, சுக்ரன் பாபர்கள்.

உங்கள் லக்னம் லக்கியா?

* அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். பெரிய பதவிகள் கிட்டும்.  தான-தருமங்கள் செய்வதில் ஆர்வம் உண்டு. சுய திறமையால் வாழ்வை சீரமைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் நீங்கள்.

லக்னாதிபதி: சுக்கிரன்
தெய்வம்: ஸ்ரீமகாலட்சுமி
தேவதை: ஸ்ரீமுருகப்பெருமான்
வஸ்திரம்: வெண்பட்டு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24, 33

வழிபாடு: வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீகாமாட்சி அம்மனைத் துதிப்பதும், தரிசிப்பதும் நலம் சேர்க்கும். அனுதினமும் ஸ்ரீஅபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர, உங்கள் வாழ்வில் வசந்தம் நாடிவந்து மகிழ்விக்கும்.

உங்கள் லக்னத்தை அறிவது எப்படி?

பொதுவாக, சூரியன் ஒருநாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 ராசிகளுக்கு மாறுவார். ஒரு ராசியில் 2 மணி நேரம் இருப்பார். நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அதுவே, உங்களின் ஜன்ம லக்னம். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'ல’ என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை அறியலாம்.