Published:Updated:

ஆரூடம் அறிவோம்

ஆரூடம் அறிவோம்

ஆரூடம் அறிவோம்

ஆரூடம் அறிவோம்

Published:Updated:
ஆரூடம் அறிவோம்
##~##

ஜோதிடம் குறித்த ஆதிகால நூல்களில் குறிப்பிடத்தக்கது பிருகு முனிவர் அருளிய பிருகு சம்ஹிதை. பிற்காலத்தில் வானியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வராஹமிஹிரர் நமக்கு அருளிச் சென்றதை 'வராஹ பிருஹத் சம்ஹிதை’ என்பார்கள்.

வேதாங்கத்தில் ஒரு பிரிவான ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்து அறிந்து உலகுக்குச் சொன்ன ரிஷிகளின் வரிசையை 'ஜோதிட சாஸ்திர குரு பரம்பரை’ எனப் போற்றுகிறோம். இந்த குரு பரம்பரை பிருகு மஹரிஷி, வசிஷ்டர், கர்கர் ஆகியோர் வரிசையில் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து, பராசரர் முனிவர் வேதகால ஜோதிட நுணுக்கங்களை ஆராய்ந்து 'பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்’ என்ற நூலை உருவாக்கினார். அவர் இந்த சாஸ்திர நுணுக்கங்களைத் தம்முடைய சீடரான மைத்ரேய மகரிஷிக்கு அருளினார். மைத்ரேயர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இப்படி உருவான இந்த சாஸ்திரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது 'பராசர குருகுல ஜோதிட சாஸ்திர முறை’ எனப்பட்டது. இது நிகழ்ந்தது மகாபாரத காலம்.

பராசர ஜோதிட குருகுலத்தில் உருவான ஜோதிட பாரம்பரியத்தில் தொடர்ந்து வந்த ஜோதிடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சத்ய கார்யர், வராஹமிஹிரர் ஆகியோர்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்து பல அரிய நூல்களை எழுதியவர் வராஹமிஹிரர். இவர் இந்தத் தேச சரித்திரத்தின் பொற்காலம் எனப் போற்றப்படும் குப்தர்கள் காலத்தில் (கி.பி.400-500) வாழ்ந்தவர். மாமன்னன் விக்ரமாதித்யனின் சபையை அலங்கரித்த நவரத்தினங்கள் எனும் ஒன்பது அறிஞர்களில் இவரும் ஒருவர். கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் வல்லவரான இவர் இயற்றிய ஜோதிட நூல், 'பஞ்ச சித்தாந்திகா’ ஆகும்.

வராஹமிஹிரரின் பாரம்பரியத்தில் வந்த ஜோதிட நிபுணர்களால் இயற்றப்பட்ட நூல்கள்... சாரவல்லி, ஜாதக பாரிஜாதா, சர்வார்த்த சிந்தாமணி, ஹோரசாரா முதலானவை. இவை அனைத்துமே பராசர முனிவரின் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானவையே.

ஆரூடம் அறிவோம்

வேத காலம் முதலே வழக்கத்திலிருக்கும் இந்து சமய ஜோதிட சாஸ்திரத்தில் ஆறு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை:

கோளம் - கோள்களின் இருப்பிடமும் சுழற்சியும் பற்றியது.

கணிதம் - கோள்களின் சுழற்சியைக் கணக்கிட உதவும் கணித சாஸ்திரம்.

ஜாதகம் - ராசிகளில் நவக்கிரகங்கள் அமைந்துள்ள அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகக் கட்ட குறியீடுகள்.

பிரஸ்னம் - சோழிகள் உருட்டி, அவற்றின் அமைப்பால் மனத்தில் எழும் கேள்விகளுக்கு விடை காணல்

முகூர்த்தம் - சுபகாரியங்கள் நடத்தச் சரியான கால நேரத்தைக் கணக்கிடும் சாஸ்திரம்

நிமித்தம் - சகுனங்கள், சொப்பன பலன்கள் போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம்.

இந்த ஆறு பிரிவுகளுக்குப் பல்வேறு உப பிரிவுகளும் உள்ளன.  

இந்து சமய ஜோதிட சாஸ்திரமானது பின்னர் சாஸ்திர நிபுணர்கள் மூலம் பாரசீகம், பாபிலோன், எகிப்து, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளுக்கும் பரவியது. அரபு நாட்டினரும் நமது வேதகால ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சாஸ்திரத்தை உருவாக்கினர். கி.பி.400-ல் ஐரோப்பிய நாடுகளிலும் நமது ஜோதிட சாஸ்திரத்தைப் பின்பற்றி எதிர்காலத்தை அறியும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து வழக்கத்தில் கொண்டுவந்தனர்.

ஒரு காலகட்டத்தில், சமய கலாசார மாற்றங்களால் ஐரோப்பிய நாட்டில் இந்த சாஸ்திரத்தின் பயன்பாடு குறைந்தாலும், கி.பி.1100 முதல் இந்த சாஸ்திரம் நடைமுறையில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இதுபற்றிய விரிவான தகவல்களையும், மேலை நாடுகளில் ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்திய ஜோதிடர்கள் குறித்த அபூர்வமான தகவல்களையும் அடுத்தடுத்த இதழ்களில் மிக விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

அதற்கு முன்னதாக நாம் படித்துத் தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான ஒரு கதையும் இருக்கிறது.

- தொடரும்...